தென்மேற்கு பருவமழை முடிந்து தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதையடுத்து வங்கக் கடலில் நிவர் புயல் உருவாகியுள்ளது. இதன் காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் மழையின் காரணமாக சென்னையின் பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்துள்ளன. சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள தகவலின்படி, நேற்று காலை 8 மணியிலிருந்து இன்று காலை 7 மணிவரை சென்னையில் 26 மரங்கள் சாய்ந்துள்ளன. சாய்ந்த மரங்களை மாநகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தினர்.
சென்னையில் 26 மரங்கள் சாய்ந்தன
சென்னை: கடந்த 24 மணி நேரத்தில் 26 மரங்கள் சாய்ந்துள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
மரம்
மேலும், ஏப்ரல் ஒன்றாம் தேதியிலிருந்து ஜூன் 30ஆம் தேதிவரை 37 மரங்களும், தென்மேற்கு பருவமழை காரணமாக ஜூலை ஒன்றாம் தேதி முதல் அக்டோபர் 28ஆம் தேதிவரை 185 மரங்களும், வடகிழக்கு பருவமழை காரணமாக அக்டோபர் 28ஆம் தேதி தொடங்கி தற்போதுவரை 116 மரங்கள் என சென்னையில் மொத்தம் 338 மரங்கள் சாய்ந்துள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. மேலும், மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள 77 நிவாரண முகாம்களில் இன்று காலைவரை 90 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
Last Updated : Nov 25, 2020, 9:49 AM IST