சென்னையின் நிலவரம்
- அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
- நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.
- அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸையும்; குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸையும் ஒட்டி இருக்கும்.
அதிகபட்ச மழை அளவு (சென்டிமீட்டரில்)
கடந்த 24 மணி நேரத்தில் காஞ்சிபுரம், செஞ்சி பகுதிகளில் 7 செ.மீ அளவிற்கும்; வானூரில் 6 செ.மீ அளவும் மழை பெய்துள்ளது. இதையடுத்து மகாபலிபுரம், மரக்காணம், விரிஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 5 செ,மீ அளவும்; கலவை, காட்பாடி, வேலூர் பேன்ற இடங்களில் 4 செ,மீ அளவும் பதிவாகியுள்ளது.
மேலும் திருவாலங்காடு, ஊத்துக்கோட்டை, மேலாலத்துர், ஆரணி, திருத்தணி, ஓமலூர், புதுச்சேரி, ஸ்ரீபெரும்புதூர், போலூர், வாலாஜாபாத், குடியாத்தம், பள்ளிப்பட்டு உள்ளிட்ட இடங்களில் 3 செ.மீ அளவிற்கு மலை பெய்துள்ளது.
இன்று முதல் அடுத்த நான்கு நாள்களுக்கு மழை
“இலங்கையின் மீது நிலை கொண்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனத்தின் காரணமாக இன்று (ஜூலை 3) நீலகிரி, சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திண்டுக்கல், திருவண்ணாமலை, விருதுநகர், ராமநாதபுரம், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும். இதனைத் தொடர்ந்து புதுவை, காரைக்கால் பகுதிகளில், சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இதையடுத்து ஜூலை 4 ஆம் தேதி சேலம், விழுப்புரம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், மதுரை, ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும்; புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
பின் ஜூலை 5 ஆம் தேதியன்று மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள், வட உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும்; புதுவை, காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
இதனைத் தொடர்ந்து ஜூலை 6, 7 தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்கள், வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும்; புதுவை, காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்” என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
“வங்கக் கடல் பகுதிகளில் இன்று (ஜூலை 3) முதல் ஜூலை 4 ஆம் தேதி வரை, மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இதனால் இந்த தேதிகளில் இப்பகுதிகளுக்கு எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
பின் தென் மேற்கு, மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் இன்று (ஜூலை 3) முதல் ஜூலை 7 ஆம் தேதி வரை பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இதனால் மீனவர்கள் இந்த தினங்களில் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம்” என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதையும் படிங்க:மதுரை உள்பட 16 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை!