தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாடப்புத்தகத்தில் கருணாநிதி பெயரை நீக்க அதிமுக அரசு செய்த செலவு?

ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில், மாணவர்களின் பாடப் புத்தகத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெயரை நீக்கி புதிய புத்தகம் அச்சடித்ததில், 1 கோடியே 42 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக இந்திய தணிக்கைத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

cga-report-says-1-dot-42-crores-lose-for-removed-karunanidhis-name-in-school-text-book
பாடப்புத்தகத்தில் கருணாநிதி பெயரை நீக்க அதிமுக அரசு செய்த செலவு?

By

Published : Jun 27, 2021, 6:23 PM IST

சென்னை:மாணவர்களின் பாடப் புத்தகத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெயரை நீக்கி புதிய புத்தகம் அச்சடித்ததில், 1 கோடியே 42 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக இந்திய தணிக்கைத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டசபையில், கடந்த 2019ஆம் ஆண்டுக்கான கணக்கு தணிக்கை அறிக்கை ஜூன் 24ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அந்த தணிக்கை அறிக்கையில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் பாடப்புத்தங்கள் வழங்குவதில் எடுக்கப்பட்ட தவறான நடவடிக்கையால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பாடப்புத்தகங்களை அச்சிடுவது யார்?

அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, 1 முதல் 12ஆம் வகுப்பு வரையில் அனைத்து பாடங்களுக்கும் இலவச புத்தகம் வழங்கப்படுகிறது. இதற்கான பாடப்புத்தங்களை அச்சிட்டு வழங்குவதற்கான செலவுகளை தொடக்கக் கல்வித்துறை, பள்ளிக்கல்வி துறை வழங்குகிறது.

மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் நிறுவன இயக்குனரகம், பள்ளிக்கல்வித்துறை வகுத்த பாடத்திட்டங்களை தமிழ்நாடு பாடநுால் மற்றும் கல்விப் பணிகள் கழகம், புத்தகத் தயாரிப்பு மற்றும் அச்சிடும் பணிகளை மேற்கொள்கின்றன.
புத்தகம் அச்சடிக்கும் பணிகளுக்கான செலவினத்திற்கான தொகையை பள்ளிக்கல்வித்துறையின் மூலம் அரசிடம் பெறுகின்றன.

பள்ளிக்கல்வி இயக்குநரகங்களின் அலட்சியத்தால் ஏற்பட்ட இழப்பு!

2019-20ஆம் ஆண்டுக்கு அச்சு காகிதங்களை கையாளும் கட்டணம் எனக்கூறி அரசாணையில் உள்ளதைவிட 5 விழுக்காடு கூடுதல் தொகையை பாடநூல் கழகம் அரசிடம் கோரியது. இதற்கு தணிக்கையில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதும், பாடநூல் கழகம் தனது கோரிக்கையை கைவிட்டது.

இந்த செலவுத் தொகையை நிர்ணயித்து பெற்றுத் தரும் தொடக்க, பள்ளிக்கல்வி இயக்குனரகங்கள் செலவுகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லவில்லை. இதனால், 2019-17ஆம் நிதி ஆண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்கு அரசிடம் இருந்து விதிகளுக்கு மாறாக கூடுதலாக 21.85 கோடி ரூபாயை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்விப் பணிகள் கழகம் பெற்றுள்ளது. இத்தொகை அரசுக்கு ஏற்பட்ட இழப்பாகும்.

அக்டோபர் 2014ஆம் ஆண்டில் 11,12ஆம் வகுப்புகளுக்கான பல்வேறு பாடநூல்களின் 1.36 கோடி புத்தகங்கள் அச்சிடுவதற்கு பள்ளிக்கல்வித்துறை இயக்குனர், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்திற்கு உத்தரவு வழங்கினார். அதன்படி, 1.36 கோடி புத்தகங்கள் அச்சிடப்பட்டன.

இதேபோல், 2015ஆம் ஆண்டு 11,12ஆம் வகுப்புகளுக்குரிய 2 பாடங்களுக்கான புத்தகங்கள் என 6 லட்சத்து 36 ஆயிரத்து 900 பிரதிகள் அச்சிடப்பட்டன. இந்தப் புத்தகத்தில் சில கருத்தியல் பிழைகளை பாட ஆசிரியர்கள் சுட்டிக்காட்டியதால் இந்த மறு அச்சு தேவைப்பட்டது.

பள்ளிக்கல்வித்துறையால் சுட்டிக்காட்டப்பட்ட இந்த கருத்தியல் பிழைகளைத் திருத்தி மீண்டும் அச்சிட்டு வெளியிட்டதற்காக 1 கோடியே 42 லட்சம் செலவிடப்பட்டுள்ளது.

கருணாநிதி பெயரை நீக்க செய்யப்பட்ட செலவு!

திமுக ஆட்சியின் போது பாடப்புத்தகங்களை எழுதியவர்கள், பாடப்புத்தகத்தில், முன்னுரை, முகவுரையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, அப்போது கல்வி அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு ஆகியோருக்கு நன்றி கூறியிருந்தனர்.

2015ஆம் ஆண்டில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின் பேரில் இதனை நீக்குவதற்கு உத்தரவிடப்பட்டது. இதனால், அரசிற்கு இழப்பு ஏற்பட்டது. மீண்டும் அச்சிட கோரிக்கை அனுப்புவதற்கு முன் பள்ளிக்கல்வித்துறை பாடப்புத்தகங்களை சரிபார்க்கவில்லை என்பதும், கூர்ந்தாய்வு செய்யவில்லை என்பதே உண்மையாக இருந்தது.


தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் மற்றும் பணிகள் கழகம் கேட்டத் தொகைகளின் சரிதன்மையை சோதிக்க பள்ளிக்கல்வித்துறை, தாெடக்கக்கல்வித்துறை தவறியதாலும், பாடநூல்களில் இருந்து தவறுகளைக் களைய தவறியதாலும் அரசுக்கு 23.27 கோடி தவிர்திருக்கக்கூடிய செலவு ஏற்பட்டுள்ளதாக தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவு ஜூலை 31 வெளியீடு!

ABOUT THE AUTHOR

...view details