தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காவலாளியின் தலையில் காரை ஏற்றிய தொழிலதிபரின் மகள் கைது!

சென்னை: பட்டினப்பாக்கத்தில் தொழிலதிபரின் மகள் ஆடி காரை பார்க் செய்யும் போது மதுபோதையில் இருந்த காவலாளியின் தலையில் ஏற்றிதால், அவர் உயிரிழந்தார்.

தொழிலதிபரின் மகள் கைது
தொழிலதிபரின் மகள் கைது

By

Published : Sep 3, 2020, 3:02 PM IST

சென்னை பட்டினப்பாக்கம் லீத் கேஸ்டில் வடக்குத் தெருவில் நேற்று (செப்.2) காவலாளியாக ஓய்வு பெற்ற அரசு அலுவலர் சிவப்பிரகாசம் வேலை பார்த்தார். வழக்கமாக வரும் காவலாளிக்கு பதிலாக சிவப்பிரகாசம் பணியில் இருந்தார். போதையில் இருந்த அவர் காரை பார்க் செய்வதற்கான பாதையில் படுத்துள்ளார்.

அப்போது அந்த குடியிருப்பில் வசித்து வரும் ரியல் எஸ்டேட் தொழிலதிபர் பழனியப்பன் என்பவரது மகள் அபர்ணா, ஆடி காரை குடியிருப்பு பகுதியில், அவருக்காக ஒதுக்கப்பட்ட பார்க்கிங்கில் நிறுத்தினர். அப்போது சொகுசு கார் காவலாளி சிவப்பிரகாசம் தலையில் ஏறி சென்றது.

இதை அறியாமல் அபர்ணா காரை பார்க் செய்துவிட்டு வீட்டிற்கு சென்றார். அதன்பின் சிவப்பிரகாசம் இறந்து கிடந்ததை பார்த்த அபர்ணாவின் சகோதரி, பட்டினப்பக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில் காவலாளி சிவப்பிரகாசம் மதுபோதையில் கார் பார்க்கிங் பாதையில் கவிழ்ந்து படுத்திருந்ததால், இருட்டில் கவனிக்காமல் அபர்ணா காரை தலையில் ஏற்றிச் சென்றது தெரியவந்துள்ளது.

மேலும், அபர்ணா 18 வயது நிரம்பி சில மாதங்களுக்கு முன்பு தான் ஓட்டுநர் உரிமம் பெற்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, அபர்ணா மீது 304 ஏ என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து காவல் துறையினர் கைது செய்தனர். விபத்து ஏற்படுத்திய சொகுசுக் காரையும் பறிமுதல் செய்தனர்.

இதையும் படிங்க: லோடு ஆட்டோ - கார் நேருக்கு மோதிய விபத்தில் காவலர் படுகாயம்!

ABOUT THE AUTHOR

...view details