தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பிபின் ராவத் விவகாரம்: பாகிஸ்தானிய ட்விட்டர் கணக்குகள் மீது வழக்குப்பதிவு!

ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத் உயிரிழந்தது குறித்து, இரண்டு பாகிஸ்தானிய ட்விட்டர் கணக்குகளில் சர்ச்சை கருத்துகளைப் பதிவிட்டவர்கள் மீது தமிழ்நாடு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பிபின் ராவத் விவகாரம்: பாகிஸ்தானிய ட்விட்டர் கணக்குகள் மீது வழக்குப்பதிவு!
பிபின் ராவத் விவகாரம்: பாகிஸ்தானிய ட்விட்டர் கணக்குகள் மீது வழக்குப்பதிவு!

By

Published : Dec 12, 2021, 9:04 PM IST

சென்னை: நீலகிரியின் குன்னூர் அருகே உள்ள காட்டேரி பகுதியில் டிசம்பர் 8ஆம் தேதி ஏற்பட்ட ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில், இந்திய முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். இதனையடுத்து விபத்து குறித்து சமூக வலைத்தளங்களில் பலர் சர்ச்சை கருத்துகளைப் பரப்பினர்.

பின்னர் குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக வதந்தி, அவதூறு பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தமிழ்நாடு காவல் துறை எச்சரித்திருந்தது.

அவதூறு பரப்பிய ட்விட்டர் கணக்கு

இந்நிலையில் ஹெலிகாப்டர் விபத்து உயிரிழப்பு குறித்து, world conflicts monitoring centre @ worldBreakingN9 மற்றும் Pakistan strategle forum @ forumstrategic ஆகிய பாகிஸ்தானிய ட்விட்டர் கணக்குகளில் அவதூறு செய்திகள் பகிரப்பட்டன.

வழக்குப்பதிவு செய்த காவல்துறை

தற்போது பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் வகையில் செய்தியினை பரப்பியோர் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில், பாகிஸ்தானிய ட்விட்டர் கணக்குகளின் மீது வழக்குப்பதிவு செய்து தமிழ்நாடு சிபிசிஐடி காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க:ராணுவ ஹெலிகாப்டர் விபத்து - காவல் துறையினர் தீவிர விசாரணை!

ABOUT THE AUTHOR

...view details