தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருமணம் செய்ய பணம்கேட்ட பெண் - கடுப்பாகி திருமணத்தை நிறுத்தியவரின் வீட்டில் சென்று ரகளை

திருமணத்திற்கு முன்பே பணம், இருசக்கர வாகனம், நகை வேண்டும் என அடம்பிடித்து காதலனிடம் தகராறு செய்த காதலியிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது காவலரின் கையைக் கடித்து, பாலியல் தொந்தரவு கொடுப்பதாகக் கூறி ஆர்ப்பாட்டம் செய்த பெண்ணை காவல் துறையினர் கைது செய்தனர்.

By

Published : Sep 1, 2022, 6:59 PM IST

Updated : Sep 1, 2022, 7:05 PM IST

Etv Bharat காவலரிடம் தகாராறு செய்த பெண்
Etv Bharat காவலரிடம் தகாராறு செய்த பெண்

சென்னை: திருவொற்றியூர் எஸ்.பி. கோயில் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரமோகன். இவருக்குத் திருமணமாகி முதல் மனைவி பிரிந்து சென்ற நிலையில் இரண்டாவதாக ரேணுகாதேவி என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். இவரது முதல் மனைவிக்கு பிறந்த தேவேந்திரகுமார் (38) என்பவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றார்.

இந்நிலையில் தேவேந்திரகுமார் புது வண்ணாரப்பேட்டையைச்சேர்ந்த செல்வி (31) என்பவரை காதலித்து வந்தார். பின்னர் இருவீட்டாரின் சம்மதத்துடன் 2021ஆம் ஆண்டு, ஜனவரி 17ஆம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. திருமணத்திற்கு முன்பே செல்வி, தனது காதலன் தேவேந்திர குமாரிடம் 5 சவரனில் தாலி சரடு, ஒரு பைக், மற்றும் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம் வேண்டும் எனக்கேட்டு தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த தேவேந்திர குமார் மற்றும் அவரது பெற்றோர் செல்வியுடன் நடக்க விருந்த திருமணத்தை நிறுத்தி விட்டனர். இதில் ஆத்திரமடைந்த செல்வி, அடிக்கடி காதலன் தேவேந்திரகுமார் வீட்டிற்குச்சென்று தகராறு செய்து வந்ததாகத் தெரிகிறது.

நேற்று (ஆக.31) மாலை வழக்கம் போல் செல்வி, காதலன் வீட்டிற்குச்சென்று தகராறில் ஈடுபட்டதால் அவரது தாய் ரேணுகாதேவி உடனே காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தார்.

இதனையடுத்து திருவொற்றியூர் காவல் நிலைய தலைமை காவலர் சரவணன், சம்பவ இடத்திற்குச்சென்று விசாரணை நடத்தினார். அப்போது செல்வி விசாரணைக்குச்சென்ற காவலர் சரவணனை, தனது செல்போனில் வீடியோ எடுத்தபோது, அதனை காவலர் சரவணன் தடுத்ததாக கூறப்படுகிறது.

இதில் ஆத்திரமடைந்த இளம்பெண் செல்வி, காவலர் சரவணன் கையை கடித்ததுடன் அவரது சீருடையை கிழித்து தகராறில் ஈடுபட்டார். மேலும், பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறி சத்தம் போட்டதாக கூறப்படுகிறது.

காவலரிடம் தகராறு செய்த பெண்

இதனைக் கேட்டு அதிர்ந்து போன காவலர் சரவணன், உடனே மகளிர் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்ததை அடுத்து அங்கு சென்ற பெண் உதவி ஆய்வாளர் ருக்மணி தலைமையிலான காவல் துறையினர் செல்வியை காவல் நிலையம் அழைத்துச்சென்றனர்.

பின்னர் அங்கு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் செல்வி மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் அவரை கைது செய்தனர்.

இதையும் படிங்க:விநாயகர் சிலைக்கு காவலுக்கு இருந்த இளைஞர் வெட்டிக் கொலை

Last Updated : Sep 1, 2022, 7:05 PM IST

ABOUT THE AUTHOR

...view details