தமிழ்நாடு

tamil nadu

பா.ஜ.க. அரசுக்கு பாடம் புகட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்று திரளுவோம் - கே.எஸ் அழகிரி

சென்னை: மக்கள் நலனுக்கு விரோதமாக செயல்படுகிற பா.ஜ.க. அரசுக்கு பாடம் புகட்டுகிற வகையில், ஜனநாயகம், மதச்சார்பின்மை, சமூகநீதி ஆகிய கொள்கைகளில் நம்பிக்கையுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஓரணியில் திரண்டு போராட்ட வியூகங்களை வகுக்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி கூறியுள்ளார்.

By

Published : Jun 26, 2021, 3:46 PM IST

Published : Jun 26, 2021, 3:46 PM IST

ETV Bharat / state

பா.ஜ.க. அரசுக்கு பாடம் புகட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்று திரளுவோம் - கே.எஸ் அழகிரி

KS Alagiri
KS Alagiri

இது தொடர்பாக கே.எஸ் அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, முதல் அலையை எதிர்கொள்ள தேவையான மருத்துவ கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த பா.ஜ.க. அரசு தவறியதால், ஆக்சிஜன், மருத்துவ படுக்கைகள், உயிர் காக்கும் மருந்துகள் தட்டுப்பாடு ஏற்பட்டு, ஏறத்தாழ 4 லட்சம் மக்கள் உயிரிழந்துள்ளனர்.

நம்மைப் போல மக்கள் தொகை கொண்ட சீனாவில் இதுவரை 100 கோடி மக்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. சீனாவில் சாத்தியமாகிற போது, இந்தியாவில் ஏன் சாதிக்க முடியவில்லை ? 111 உலக நாடுகளில் தடுப்பூசி போடுகிற எண்ணிக்கையில் இந்தியா 63-வது இடத்தில் தான் உள்ளது.

பா.ஜ.க. அரசு தடுப்பூசி உற்பத்தியை பெருக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போதைய தடுப்பூசி போடுகிற ஒன்றிய அரசின் இலக்கின்படி, 100 சதவிகிதம் தடுப்பூசியை 2024 இல் தான் போட்டு முடிக்க முடியும்.

கரோனாவின் கோரப்பிடியிலும், பொருளாதார பேரழிவினாலும் பாதிக்கப்பட்டிருக்கும் மக்கள் மீது பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி கடுமையான தாக்குதலை பா.ஜ.க. அரசு நிகழ்த்தியுள்ளது. தமிழ்நாட்டின் பல நகரங்களில் பெட்ரோல் விலை ரூ.100-ஐ தாண்டிவிட்டது.

மக்கள் நலனுக்கு விரோதமாக செயல்படுகிற மத்திய பா.ஜ.க. அரசுக்கு பாடம் புகட்டுகிற வகையில் ஜனநாயகம், மதச்சார்பின்மை, சமூகநீதி ஆகிய கொள்கைகளில் நம்பிக்கையுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஓரணியில் திரண்டு போராட்ட வியூகங்களை வகுக்க வேண்டும்" என அறிக்கையில் கே.எஸ்.அழகிரி குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: '18+ க்கு தடுப்பூசி: அறிவித்தால் மட்டும் போதாது. செயல்படுத்துங்கள்' - கே எஸ் அழகிரி

ABOUT THE AUTHOR

...view details