சென்னை விமான நிலையத்தில் பாஜக மாநில பொதுச்செயலாளர் வானதி ஸ்ரீனிவாசன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது, "இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் யாருக்கும் எதிரானது அல்ல. திமுக தான் இஸ்லாமியர்களிடையே பிரிவினைவாதத்தைத் தூண்டி ஆட்சிக்கு வரவேண்டும் என்னும் எண்ணத்தில் இது போன்ற ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறது.
‘குடியுரிமை திருத்தச் சட்டம் யாருக்கும் எதிரானது அல்ல’ - வானதி ஸ்ரீனிவாசன்
சென்னை: இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் யாருக்கும் எதிரானது அல்ல என்று பாஜக மாநில பொதுச்செயலாளர் வானதி ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.
vanathi srinivasan
குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் முழுமையாகத் தெரிந்துகொண்டு கருத்து தெரிவிக்க வேண்டும். ராணுவ தளபதியின் கருத்துக்கு, அவர் அரசியல் சார்ந்தோ அல்லது குறிப்பிட்ட கட்சியைச் சார்ந்தோ கருத்து தெரிவித்தால் தவறு. நாட்டில் நடக்கும் போராட்டங்களில் தேச விரோத அந்நிய சக்திகளால் வன்முறை நிகழ்வதை பார்க்கிறோம் என்று கூறியதில் ஒன்றும் தவறில்லை" என்றார்.
இதையும் படிங்க: பொதுமக்களிடம் நாடகமாடிய நடிகை திஷா சவுத்ரி வழக்கின் கிளைமக்ஸ்...