தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'நித்யானந்தா செய்தது குற்றம்... இந்து மதத்தை இழிவுப்படுத்தினால் நடவடிக்கை தேவை' - அதிரடி காட்டிய ஸ்ரீமாணிக்கநந்தா சுவாமி!

சென்னை: நித்யானந்தாவைக் காரணமாகக் கொண்டு, இந்து மதத்தை இழிவுப்படுத்தி சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க ஸ்ரீமாணிக்கநந்தா சுவாமி காவல் ஆணையரிடம் புகார் அளித்தார்.

nithyanandha
ஸ்ரீமாணிக்கநந்தா சுவாமி

By

Published : Dec 9, 2019, 10:00 PM IST

போலி சாமியார் நித்யானந்தா செய்த குற்றத்திற்காக ஒட்டுமொத்த இந்து மதத்தையும் இழிவுப்படுத்தும் வகையில், சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, பெரியபாளையம் ஸ்ரீமாணிக்கநந்தா சுவாமி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

"இந்து மதத்தைப் பயன்படுத்தி நித்யானந்தா சில செயல்களில் ஈடுபடுவது தவறு. இமய மலையில் இருப்பது ஒன்று தான் கைலாசம். அந்தப் பெயரைப் பயன்படுத்தி, நித்யானந்தா தனி நாடு கேட்பது குற்றச்செயலாகும். இதனால் கொல்லிமலையில் நடைபெற்ற சாமியார்கள் கூட்டத்தில் இது தொடர்பாக புகார் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தி சமூக வலைதளங்களில் ஒட்டுமொத்த இந்து மதத்தையும் அவதூறாகப் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது" என்றார்.

ஸ்ரீமாணிக்கநந்தா சுவாமி காவல் ஆணையரிடம் புகார்

இதையும் படிங்க: சிறார் ஆபாசப் படங்கள் பார்ப்போர் பட்டியல் - காவல்துறை தீவிரம்

ABOUT THE AUTHOR

...view details