சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவையில் இந்தி திணிப்புக்கு எதிராக தனித் தீர்மானம் கொண்டு வந்தார். இந்தி திணிப்புக்கு எதிரான தீர்மானத்தின் மீது அதிமுக சார்பில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், ’இந்திக்கு எதிரான போராட்டம் 1930 இல் தொடங்கியது.
சென்னையில் இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட நடராஜன் உயிரிழந்தார். மொழி போராட்டத்தின் முதல் களபலி நடராஜன், இதனை தொடர்ந்து தாளமுத்து உயிரிழந்தார். 1940 ஆம் ஆண்டு இந்தி திணிப்பை அரசு திரும்ப பெற்றது. மேலும் இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரை ஆங்கிலம் ஆட்சி மொழியாக இருக்கும் என பிரதமர் நேரு தெரிவித்ததை தொடர்ந்து இந்தி எதிர்ப்பு போராட்டம் லேசாக ஓய்ந்தது.
1960 ஆம் ஆண்டு தமிழ்நாடு முழுவதும் போராட்டம் தீவிரமடைந்தது. போலீஸ் துப்பாக்கி சூடு அதிகரிக்க உயிர் பலிகளும் அதிகரித்தது. வேறு வழியின்றி ஆங்கிலம் ஆட்சி மொழியாக இருக்கும் என அப்போதைய ஆட்சியாளர்கள் முடிவு செய்தனர்.