தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தொடரும் ஆன்லைன் சூதாட்டங்கள்... உயரும் உயிர் பலிகள்!!!

ஆன்லைன் டிரேடிங்கில் 10 லட்சம் பணத்தை இழந்ததால் தனியார் நிறுவன பொறியாளர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

By

Published : Mar 24, 2023, 5:09 PM IST

online trading
online trading

சென்னை:சென்னை மடிப்பாக்கம் கீழ்க்கட்டளை பகுதியைச் சேர்ந்தவர், பரணிதரன்(32). ஓ.எம்.ஆரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பொறியாளராகப் பணியாற்றி வந்தார். பரணிதரன் தான் சம்பாதித்த பணத்தை ஆன்லைன் டிரேடிங் ஆப்பான க்ரோவில் முதலீடு செய்துள்ளார்.

இதைத்தொடர்ந்து ஆன்லைன் டிரேடிங்கில் மூழ்கிய பரணிதரன் பொறியாளர் வேலையை விட்டுவிட்டு ஆன்லைன் டிரேடிங்கை முழு நேரத்தொழிலாக பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் திடீரென்று ஆன்லைன் டிரேடிங்கில் பணத்தை இழந்த பரணிதரன் நஷ்டம் அடைந்ததால் பல இடங்களில் கடன் வாங்கி, டிரேடிங்கில் முதலீடு செய்துள்ளார்.

சுமார் 10 லட்சம் ரூபாய் வரை ஆன்லைன் டிரேடிங்கில் பரணிதரன் நஷ்டம் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் பரணிதரனுக்கும் அவரது கர்ப்பிணி மனைவியான காயத்ரிக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது. இதைத்தொடர்ந்து மனைவி பரணிதரனை பிரிந்து அவரது தாயார் வீட்டிற்குச் சென்றுள்ளார்.
கடந்த 22ஆம் தேதி திருவண்ணாமலை அருகே செஞ்சியில் திருமணத்திற்காக பரணிதரனின் தாயார், அவரை தனியாக விட்டுச்சென்ற நிலையில் மன உளைச்சலில் இருந்த பரணிதரன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

இன்று காலை பரணிதரனின் தாய் வீட்டிற்கு வந்து பார்த்த போது, வீட்டில் வரவேற்புரையில் பரணிதரன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக மடிப்பாக்கம் போலீசாருக்கு அளித்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பரணி தரனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் இந்த தற்கொலை தொடர்பாக மடிப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:ஆன்லைன் ரம்மி தடை மசோதா இன்று ஆளுநருக்கு அனுப்ப ஏற்பாடு!

ABOUT THE AUTHOR

...view details