தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெட்ரோல், டீசல் விலையை குறைக்கக் கோரி பேரணி- அண்ணாமலை மீது வழக்குப்பதிவு!

தடையை மீறி தலைமை செயலகத்தை முற்றுகையிட முயன்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்பட 5000 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்

தமிழக அரசை கண்டித்து பாஜக முற்றுகை போராட்டம்
தமிழக அரசை கண்டித்து பாஜக முற்றுகை போராட்டம்

By

Published : Jun 1, 2022, 9:42 AM IST

சென்னை: பெட்ரோல், டீசல் மீதான வரியை தமிழ்நாடு அரசு குறைக்க வேண்டுமென பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் ஹெச் ராஜா உள்பட 5,000 பேர் நேற்று எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்திலிருந்து கோட்டையை நோக்கி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை போலீசார் தடுத்து நிறுத்தி சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். இந்தப் போராட்டத்திற்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. இந்நிலையில் தடையை மீறி சட்டவிரோதமாக கோட்டையை நோக்கி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக தலைவர் அண்ணாமலை, ஹெச்.ராஜா உள்பட 5000 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் எழும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

சட்டவிரோதமாக கூடுதல், அரசு அலுவலர் உத்தரவை மீறி செயல்படுதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:உதயநிதி ஸ்டாலினை வைத்து திமுக நாடகம் நடத்தி வருகிறது - ஜெயக்குமார் குற்றச்சாட்டு

ABOUT THE AUTHOR

...view details