தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Varisu Shooting Spot தகராறு - அனுமதியின்றி கொண்டு வரப்பட்ட யானை?

பூந்தமல்லி அருகே வாரிசு படப்பிடிப்பு தளத்தில் உரிய அனுமதியின்றி மிருகங்களை வைத்து படப்பிடிப்பு நடத்தியதாக புகார் எழுந்துள்ளது. இதனிடையே படப்பிடிப்பு குழுவினர் தாக்கியதாக செய்தியாளர்களும், அத்துமீறி படப்பிடிப்பு தளத்திற்குள் டிரோன் கேமராவை பறக்க விட்டு படம் பிடித்ததாக படப்பிடிப்பு குழுவினரும் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Nov 23, 2022, 10:09 AM IST

Updated : Nov 23, 2022, 6:42 PM IST

பூந்தமல்லி : செம்பரம்பாக்கத்தில் உள்ள ஈ வி பி படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் வாரிசு படத்திற்காக பிரம்மாண்டமாக அரங்குகள் அமைத்து படப்பிடிப்பு நடந்து வருகிறது. இங்கு ஆயிரம் மாடுகள் மற்றும் யானைகளை வைத்து உரிய அனுமதியின்றி படப்பிடிப்பு நடத்துவதாக வந்த தகவலையடுத்து சென்னையில் உள்ள தனியார் தொலைக்காட்சி நிறுவன செய்தியாளர் செய்தி சேகரிக்க சென்றனர்.

அப்போது படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த இடத்தில் செய்தியாளர்கள் ட்ரோன் கேமராவை பறக்கவிட்டு காட்சிப்படுத்தியதாக கூறப்படும் நிலையில் படபிடிப்பு தளத்தில் இருந்து வந்த ஊழியர்கள் செய்தியாளர்கள் மற்றும் கேமராமேன் வைத்திருந்த கேமரா ஆகியவற்றை பறித்து கொண்டு அவர்களை மிரட்டும் தோணியில் பேசி அவர்களை காரில் கடத்தி சென்று தாக்கியதாக கூறப்படுகிறது.

வாரிசு படப்பிடிப்பு தளம்

இந்த காட்சிகள் அந்த தொலைக்காட்சியில் வெளியானது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு நசரத்பேட்டை போலீசார் விரைந்து சென்று இரு தரப்பினரையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் படப்பிடிப்பு குழுவினர் பறித்து வைத்திருந்த கேமரா, டிரோன் ஆகியவற்றை மீட்டு செய்தியாளரிடம் ஒப்படைத்தனர். மேலும் தங்களை தாக்கியதாக செய்தியாளர்கள் புகார் அளித்தனர். மேலும் தங்களது அனுமதியின்றி படப்பிடிப்பு தளத்திற்குள் டிரோன் கேமராவை பறக்க விட்டு படம் பிடித்ததாக படப்பிடிப்பு குழுவினரும் புகார் அளித்தனர். இரண்டு தரப்பினரும் அளித்த புகாரில் நசரத்பேட்டை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க : 20 ஆண்டுகளுக்குப் பிறகு புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸுக்கு தயாராகும் "பாபா"

Last Updated : Nov 23, 2022, 6:42 PM IST

ABOUT THE AUTHOR

...view details