தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மார்ச் 12ஆம் தேதி அமமுக தேர்தல் அறிக்கை வெளியீடு

வருகின்ற 12ஆம் தேதி அமமுகவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

ammk election manifesto
மார்ச் 12ஆம் தேதி அமமுக தேர்தல் அறிக்கை வெளியீடு

By

Published : Mar 9, 2021, 2:16 PM IST

சென்னை:தேர்தலுக்கான பணிகள் சூடுபிடித்துள்ள நிலையில் நாளை முக்கிய கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட இருக்கின்றன. கடந்த இரண்டு நாட்களாக வேட்பாளர் நேர்காணல் அம்மா மக்கள் முன்னேற்ற கழக அலுவலகத்தில் டிடிவி தினகரன் தலைமையில் நடைபெற்று வரும் நிலையில் நாளை (மார்ச்.10) அமமுக சார்பில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படவிருக்கிறது.

இது தொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விடுத்துள்ள அறிக்கையில், "அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சட்டப்பேரவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை வெளியீட்டு சிறப்பு பொதுக்கூட்டம் ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ (YMCA) மைதானத்தில் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது.

இதில், கூட்டணி கட்சித் தலைவர்கள் ஒரே மேடையில் கலந்து கொள்வார்கள். தலைமை கழக நிர்வாகிகள், பேரூராட்சி, வட்டம், ஊராட்சி, கிளை கழகச் செயலாளர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் கரோனா தடுப்பு வழிமுறைகளைப் பின்பற்றி கலந்து கொள்ள வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்களை கவரும் வகையில் முக்கிய அறிவிப்புகள் அமமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெறும் என கட்சி நிர்வாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க:முதல் ஆளாக நின்று எதிர்ப்பேன் - பாரதிராஜா எச்சரிக்கை!

ABOUT THE AUTHOR

...view details