அமமுக பொருளாளர், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் வெற்றிவேல் உடல்நிலை பாதிக்கப்பட்டு கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் வெற்றிவேலுக்கு செயற்கை சுவாசக் கருவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கடந்த வாரம் வெற்றிவேலுக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் உடல்நிலை சற்று தேறினார்.