சென்னைகடற்கரை மெரினா சாலையில் உள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழ் மகன் உசேன், “அதிமுகவை எம்ஜிஆர் ஆரம்பிக்கும் போது நான்காவது ஆளாக ரத்தத்தில் கையெழுத்துப் போட்டவன் நான். அதிமுகவில் ஒரு அடிமட்ட தொண்டனுக்கு அவைத்தலைவர் பதவியை வழங்கிய தொண்டர்களுக்கு நன்றி.
எம்ஜிஆர் அதிமுகவை ஆரம்பிக்கும் ரத்தத்தில் கையெழுத்துப் போட்டவன் நான்.. ஈபிஎஸ் தான் தலைமையேற்க வேண்டும் - தமிழ் மகன் உசேன் அதிமுக என்ற இயக்கம் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். இந்த இயக்கம் நீண்ட காலம் மக்கள் பணியாற்ற எடப்பாடி பழனிச்சாமி தலைமை ஏற்க வேண்டும். அதிமுகவில் அனைவரும் ஒற்றைத் தலைமையை விரும்புகின்றனர். அதிமுகவுக்கு எடப்பாடி பழனிசாமி தான் தலைமையேற்க வேண்டும் என தொண்டர்கள் விருப்பமாக உள்ளது” என தெரிவித்தார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை அப்போது அவருடன் தென் சென்னை முன்னாள் மக்களவை உறுப்பினர் ஜெயவர்தன், முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க: இனி அதிமுகவில் ஒற்றை தலைமை தான் - ஜெயக்குமார் திட்டவட்டம்!