சென்னை பூந்தமில்லியில் இன்று நடைபெற்ற அதிமுக செயற்குழு கூட்டத்தில் பேசிய ஓ. பன்னீர்செல்வம் பேசுகையில், ‘நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்த திமுகவை புரிந்துகொண்ட மக்கள் இடைத்தேர்தலில் திமுகவை தோற்கடித்தனர்.
உள்ளாட்சித் தேர்தலில் சுழற்றியடுக்கும் சுனாமியாக மக்கள் சக்தி மாறப்போகிறது. வலுவான இயக்கத்தால் வலுவான ஆட்சி நடைபெறுகிறது. மக்களுக்கு தேவையான திட்டங்கள் தீட்டப்பட்டு வருகிறது.
விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலின் வெற்றியின் மூலம் நல்ல தீர்ப்பை மக்கள் அளித்திருக்கிறார்கள். தீய சக்திகளிடமிருந்து மக்களை காப்பதற்கான தீர்ப்பாக அதனைக் கருதுகிறேன்.
வெற்றி வாய்ப்பை நாம் இழந்தபோதும் சோர்வடையாமல் உழைத்ததால் தான் நமக்கு இந்த வெற்றி கிடைத்தது’ என தெரிவித்தார். மேலும், அதிமுகவில் வெற்றி இருக்கிறது ஆனால், வெற்று இடம் இல்லை என்று ரஜினிக்கு ஓபிஎஸ் பதிலடி தந்துள்ளார்.
இதையும் படிங்க:'நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு' - அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம்!