தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அதிமுக கூட்டணி- யார் யாருக்கு எந்த தொகுதி? இன்னும் சற்று நேரத்தில்...

சென்னை: நாடாளுமன்றத் தேர்தலுக்கான அதிமுக கூட்டணிக் கட்சிகளின் தொகுதி ஒதுக்கீடு விவரம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.

By

Published : Mar 17, 2019, 7:50 AM IST

Updated : Mar 17, 2019, 11:00 AM IST

சற்று நேரத்தில்தொகுதி ஒதுக்கீடு

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள 8 கட்சிகளுக்கும் எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது என்பது குறித்து கடந்த 4 நாட்களாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது. தே.மு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. ஆகிய கட்சிகள் சில தொகுதிகளை விட்டுக் கொடுக்க தயக்கம் காட்டியதால் தொகுதியை ஒதுக்கீடு செய்வதில் தாமதம் ஆவதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை மற்றும் வேட்பாளர் தேர்வு ஆகியவை பற்றி முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இருவரும் கட்சித் தலைமை அலுவலகத்தில் நேற்று இரண்டுமுறை தீவிர ஆலோசனை மேற்கொண்டனர். அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகளுடன் அவர்கள் கருத்துக்களைக் கேட்டறிந்தனர்.

சென்னை ஆழ்வார்பேட்டை தனியார் நட்சத்திர விடுதியில் தொகுதிப் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி சற்றுநேரத்தில் தொடங்கவள்ளது. இதில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

Last Updated : Mar 17, 2019, 11:00 AM IST

ABOUT THE AUTHOR

...view details