தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தடையில்லா சான்று பெறாமல் வேளாண் கல்லூரியில் மாணவர் சேர்க்கை: அரசு பதிலளிக்க உத்தரவு

சென்னை: தடையில்லா சான்று பெறாமல் வேளாண் படிப்புகளைத் தொடங்கும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல்செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Admission in the Agricultural College without obtaining proof of non-restriction:  Tamil Nadu  Government ordered to respond
Admission in the Agricultural College without obtaining proof of non-restriction: Tamil Nadu Government ordered to respond

By

Published : Sep 16, 2020, 2:45 PM IST

வேளாண் கல்லூரிகள் ஆரம்பிக்க வேண்டும் என்றால் 110 ஏக்கர் நிலம் இருக்க வேண்டும், ஆய்வக வசதி இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகளை இந்திய விவசாய ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகங்கள் வகுத்துள்ளன.

ஆனால், தமிழ்நாட்டில் உள்ள ஒன்பது நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் இந்த விதிமுறைகளையும், பல்கலைக்கழக மானியக்குழு விதிகளையும் பின்பற்றாமல் வேளாண்மை படிப்புகளைத் தொடங்கியுள்ளதாகக் கூறி சுயநிதி வேளாண் கல்லூரிகள் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

அதில், விவசாய படிப்புகள் தொடங்க தமிழ்நாடு அரசின் தடையில்லா சான்று பெற வேண்டும் என கடந்த ஜூலை மாதம் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதுவரை மாணவர்கள் சேர்க்கை நடத்தக் கூடாது எனவும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்த அரசாணையின் அடிப்படையில் மாணவர் சேர்க்கைக்கு தடைவிதிக்கக் கோரி அரசுக்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மனுவில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், அரசாணையின் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து செப்டம்பர் 29ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல்செய்யும்படி தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.

ABOUT THE AUTHOR

...view details