தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உதவித்தொகை கையாடல் வழக்கு: ஆதிதிராவிடர் நலத் துறை செயலாளர் ஆஜராக உத்தரவு!

சென்னை: ஆதிதிராவிடர் மாணவர்களின் கல்விக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் கையாடல் செய்யப்படுவதாக தொடுக்கப்பட்ட வழக்கில், உரிய ஆவணங்களுடன் ஆதிதிராவிடர் நலத் துறை செயலாளர் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

chennai high court

By

Published : Oct 14, 2019, 9:21 PM IST

ஆதிதிராவிட மாணவர்களின் கல்விக்காக தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு உதவித்தொகை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுவருகின்றன. இத்திட்டங்களில் அதனைச் சார்ந்த பல்வேறு துறை அலுவலர்கள் முறைகேடு செய்வதாகக் கூறி, நாகப்பட்டினத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.

அதில், ”ஆதிதிராவிடர் உதவித்தொகை திட்டங்களில், அத்துறை சார்ந்த அலுவலர்களின் கையாடல்கள் குறித்து அரசுக்குப் பல முறை புகாரளிக்கப்பட்டது. இதன் விளைவாக அரசு சார்பில் தணிக்கைக் குழு அமைக்கப்பட்டு விசாரிக்கையில், 17 கோடியே 36 லட்சம் ரூபாய் அளவுக்கு கையாடல் நடந்துள்ளதாகக் கண்டறியப்பட்டது. ஆனால் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே அந்த வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி ஆகியோர், இந்த வழக்கில் உரிய ஆவணங்களுடன் அக்டோபர் 21ஆம் தேதி நேரில் ஆஜராகும்படி ஆதிதிராவிடர் நலத் துறை செயலாளருக்கு உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க:

சமையல் எரிவாயு சிலிண்டர் வினியோகம்: கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்கக்கோரி வழக்கு

ABOUT THE AUTHOR

...view details