தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசு நில ஆர்ஜிதம் செய்யும்போதே உரிய இழப்பீட்டுத்தொகை தரலாம் - அரசுக்கு அட்வைஸ் செய்த ஹைகோர்ட்!

அரசு நலத்திட்டங்களுக்காக நிலம் ஆர்ஜிதம் செய்யும்போது உரிய இழப்பீட்டை வழங்கிய பின்னர் நில ஆர்ஜிதம் செய்யலாம் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Feb 28, 2023, 4:58 PM IST

சென்னை வண்டலூரை சேர்ந்த நிர்மலா தயாளன், கெளசல்யா, சித்ரா, தாமோதரன், தீபிகா மற்றும் தீபக்‌ஷ்வரன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில், கடந்த 2001ஆம் ஆண்டு வண்டலூரில் ஜி.எஸ்.டி சாலை மற்றும் மீஞ்சூர் - கொல்கத்தா நெடுஞ்சாலையை இணைக்கும் பகுதியில் புறவழிச்சாலை அமைக்க ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட்டது.

இதையடுத்து, நில உரிமையாளர்களுக்கு 1 சென்ட் 1,150 ரூபாய் என இழப்பீடு நிர்ணயிக்கப்பட்டது. நில ஆர்ஜிதம் செய்யப்பட்ட பகுதிகள் வளர்ச்சியடைந்து வரும் பகுதி என்பதால் கூடுதல் இழப்பீடு கேட்டு தொடரப்பட்ட வழக்கை விசாரித்த செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றம் சென்ட் 5,750 ரூபாய் என நிர்ணயம் செய்தது.

இதை ஏற்காத நில உரிமையாளர்கள், வண்டலூரில் சென்ட் 45,417 ரூபாய் விற்பனை செய்யப்படுவதால், கூடுதல் இழப்பீட்டை வழங்க வேண்டும் என தொடர்ந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிமன்றம் சென்ட் 15 ஆயிரம் ரூபாயாக நிர்ணயித்து உத்தரவிட்டது.

இதே போல் நிலங்களை இழந்த கண்ணன், மலர்விழி, கார்த்திக் ஆகியோர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், 'நிலம் ஆர்ஜிதம் தொடர்பாக ஏராளமான வழக்குகள் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது வேதனை அளிக்கிறது. அரசு நலத்திட்டங்களுக்காக நிலம் ஆர்ஜிதம் செய்யும் முன்பு உரிய இழப்பீட்டை உரிமையாளர்களுக்கு வழங்கலாம். வண்டலூர் வளர்ச்சியடைந்து வரும் பகுதியாக இருப்பதால், ஆர்ஜிதம் செய்யப்படும் பகுதிக்கு ஏற்ப இழப்பீட்டை அரசு நிர்ணயித்து வழங்க வேண்டும்.

இதனால் வழக்குகள் தாக்கல் செய்வது குறையும். இதுகுறித்து நீதிமன்றங்கள் உரிய உத்தரவுகளை பிறப்பித்தாலும், அரசு மேல்முறையீடு செய்து இழப்பீட்டை வழங்க கால தாமதம் செய்கிறது. அதனால், வழக்கு நிலுவையில் இருக்கும் போதே மனுதாரர்கள் பலர் மரணமடைந்து விடுகின்றனர்.

அதிகரித்து வரும் நில ஆர்ஜிதம் மற்றும் இழப்பீடு தொடர்பான வழக்குகளை விரைந்து விசாரிக்க சிறப்பு அமர்வு ஏற்படுத்த தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்யப்படும். மேலும், மனுதாரர்களுக்கு சென்ட் 15 ஆயிரம் ரூபாய் என நிர்ணயித்து, கடந்த 2021ஆம் ஆண்டு முதல் கணக்கிட்டு 15 சதவிகித வட்டியுடன் 3 மாதத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: சென்னையில் பால் வியாபாரி கொலை வழக்கு: ரவுடிக்கு ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்

ABOUT THE AUTHOR

...view details