காவிரி விவகாரம் காரணமாக தமிழகத்தில் ஐபிஎல் போட்டி நடப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை தமிழ் அமைப்புக்கள் கடந்த வருடம் நடத்தியது. இதன் காரணமாக சென்னையில் நடைபெறும் அனைத்து ஆட்டங்களும் புனேவுக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், ஒரு ஆண்டுக்கு பிறகு இன்று மீண்டும் ஐபிஎல் போட்டிகள் சென்னையில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, நடிகை கஸ்தூரி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டிக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தை விமர்சிக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் விவகாரம்: தமிழ் அமைப்புகளை வம்பிழுக்கும் நடிகை கஸ்தூரி!
சென்னை: கடந்த வருடம் ஐபிஎல் போட்டிகளுக்கு எதிராக தமிழகத்தில் நடைபெற்ற போராட்டத்தை விமர்சிக்கும் வகையில் நடிகை கஸ்தூரி சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
கஸ்தூரி
அவர் தெரிவித்துள்ளதாவது,
இன்று #IPL12 விமர்சையாக துவக்கம். போன வருடம் போராடிய தமிழர் நலவிரும்பிகள் ஏன் இந்த வருடம் காணோம்? ஒருவேளை, தமிழ்நாட்டில் காவிரி கரை புரண்டு ஓடுவதால், கர்நாடக பெங்களூரு அணியும் தமிழ்நாடு சென்னை அணியும் கிரிக்கெட் ஆடுவதற்கு இப்பொழுது யாருக்கும் ஆட்சேபமில்லையோ? என்று அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.