பத்திரிகையாளர்களிடம் கடுப்பான சரத் குமார் சென்னை:வம்சி இயக்கத்தில் விஜய் நடித்து இந்தப் பொங்கலுக்கு வெளியான திரைப்படம், வாரிசு. இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது. இதனையடுத்து படக்குழுவினர் நன்றி தெரிவிக்கும் நிகழ்வு இன்று (ஜன.16) சென்னையில் நடைபெற்றது.
இவ்விழாவில் இயக்குநர் வம்சி, தயாரிப்பாளர் தில் ராஜூ, நடிகர் சரத்குமார், ஷ்யாம், சங்கீதா, இசையமைப்பாளர் தமன், பாடலாசிரியர் விவேக், எடிட்டர் பிரவீன், விடிவி கணேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிந்த பின்னர் சரத் குமாரிடம் செய்தியாளர்கள் சார்பில் கேள்வி கேட்கப்பட்டது.
அப்போது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இருக்கும்போதே விஜய்க்கு சூப்பர் ஸ்டார் பட்டம் கொடுக்கிறீர்களே? என்ற செய்தியாளரின் கேள்விக்கு கோபமடைந்த சரத்குமார், காட்டமாக ஒரு பதில் அளித்தார். 'என் மகனுக்கு நான் தான் சூப்பர் ஸ்டார். எனக்கு என் அப்பா தான் சூப்பர் ஸ்டார். சூப்பர் ஸ்டார் விஷயத்தை பெரிதுபடுத்தி உலகத்தில் மிகப்பெரிய பிரச்னை போல் செய்ய வேண்டாம்.
நான் விஜய்யை சூப்பர் ஸ்டார் என்று தான் சொன்னேன். முதலமைச்சராவார் பிரதமர் ஆவார் என்று நான் சொல்லவில்லை. சூப்பர் ஸ்டார் என்று தான் சொன்னேன். சூப்பர் ஸ்டார் என்பது ஒரு டைட்டில், அவ்வளவு தான். நான் சுப்ரீம் ஸ்டார், சுப்ரீம் ஸ்டார் பெருசா சூப்பர் ஸ்டார் பெருசா? பட்டத்தை தான் பார்ப்பீங்களா... மனிதரை பார்க்க மாட்டீங்களா” என கோபமாகப் பதிலளித்தார்.
இதையும் படிங்க:'ஆர்ஆர்ஆர்' திரைப்படத்தை பார்த்து ஜேம்ஸ் கேமரூன் பாராட்டினார் - எஸ்.எஸ்.ராஜமௌலி