தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கட்டுப்பாட்டிலுள்ள உணவகங்களையும் நவீனப்படுத்த நடவடிக்கை - சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன்!

சென்னை: தனியார் உணவகங்களுக்கு நிகராக சுற்றுலாத் துறை கட்டுப்பாட்டிலுள்ள உணவகங்களையும் நவீனப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனச் சுற்றுலாத் துறை அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார்.

சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன்
சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன்

By

Published : Jun 19, 2021, 4:40 PM IST

சென்னை தீவுத் திடல் பகுதியில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்துக்கு சொந்தமான உணவகத்தை, தமிழ்நாட்டின் சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆய்வு செய்தார்.

பின்னர், சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ’’ சென்னை தீவுத்தடல் பகுதியில் உள்ள சுற்றுலா உணவகத்தை நவீன வசதிகளுடன் டிரைவிங் உணவக வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தமிழ்நாடு சுற்றுலா துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து உணவகங்களையும், தனியார் உணவகங்களுக்கு நிகராக மேம்படுத்தப்டும். அதன் உள்கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. உணவகங்களில் தற்போது அளிக்கப்படும் உணவு வகைகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின் படி ஊரடங்கிலிருந்து சுற்றுலாத் தலங்களுக்கு தளர்வுகள் அளிக்கப்பட்டது. பின்னர், சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் பல்வேறு புதிய திட்டங்களும், நவீனப்படுத்துதல் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்'' எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பப்ஜி மதனுக்கு ஜூலை 3ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்

ABOUT THE AUTHOR

...view details