சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (மே 7) மனிதவள மேலாண்மைத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, "அகில இந்திய குடிமைப்பணி தேர்வு மையம் சிறப்பாக செயல்பட்டு தமிழ்நாட்டின் இளைஞர்கள் அதிகளவில் வெற்றி பெற உதவியுள்ளது.
போட்டித்தேர்வு பயிற்சி மையங்கள் புதிய உத்திகளுடன் செயல்பட நடவடிக்கை
போட்டித் தேர்வு பயிற்சி மையங்கள் புதிய உத்திகளுடன் செயல்படுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மனிதவள மேலாண்மைத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், ஒன்றிய அரசின் பணியாளர் தேர்வு வாரியம், ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம், வங்கிப் பணியாளர் தேர்வாணையம் மற்றும் ஒருங்கிணைந்த பாதுகாப்புத்துறை பணிகளுக்கு மற்றும் பொதுத்துறை நிறுவன பணிகளுக்கு தமிழ்நாட்டு இளைஞர்களைத் தயார்ப்படுத்த வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு ஒரு புதிய திட்டம் ஏற்படுத்தப்படும். அதன்படி போட்டித்தேர்வு பயிற்சி மையங்கள் புதிய உத்திகளுடன் செயல்படுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மாநிலத்தில் உள்ள பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் இப்பயிற்சி மையத்தில் பயனடைவதற்கு தகுந்தார்போல் பாடத்திட்டங்களில் தெளிவு முறை, கருத்தில் மேம்பாடு உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க:மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்துக்கு மாநில சுகாதாரத்துறை அமைச்சர்கள் பாராட்டு - மா. சுப்பிரமணியன்