சென்னை:மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ''சூடான உணவுப்பொருட்களை நெகிழிப்பைகளில் பொட்டலமிட்டு விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும். நெகிழிப்பைகளில் உள்ள உணவுப்பொருட்களை பொட்டலம் இடும் போது பைகளில் உள்ள நுண்துகள்கள் உணவில் கலந்து உணவின் தரத்தை முற்றிலும் மாற்றி விடுவது’’ எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ''இதனால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகரிப்பதோடு, இது தொடர்பாக உணவகங்களுக்கும், தேநீர் கடைகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, பொதுமக்களுக்கு தங்கள் இல்லங்களில் இருந்து பாத்திரம் எடுத்துச்செல்லும் வழக்கத்தை ஊக்குவிப்பதோடு விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும். இந்த செயலில் தொடர்ந்து ஈடுபடும் உணவகங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் அனைவரையும் சென்றடையும் வகையில் 8.53 லட்சம் தொழிலாளர்களை உள்ளடக்கிய, 711 தொழிற்சாலைகளில், தொழிற்சாலை வளாகத்திலேயே சுகாதார பரிசோதனை முகாம்கள் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த அவசரகால மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தை பராமரிப்பு மையங்கள் தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு பிரசவத்தின்போது, தாய்மார்களின் நோய் மற்றும் இறப்பு விகிதங்களை கணிசமாக குறைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இன்னுயிர் காப்போம் - நம்மை காக்கும் 48 திட்டம்:
- இந்த திட்டத்தின் மூலம் 18.12.2021 முதல் 31.3.2023 வரை 135.01 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகையில் 1,53,011 நபர்கள் பயனுடைந்துள்ளார்கள். இதில் அரசு மருத்துவமனைகளில் மட்டும் 1,39,011 நபர்கள் 111.63 கோடி ரூபாய் காப்பீட்டு தொகையில் பயனடைந்துள்ளனர். 28 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு 24 மணி நேர சேவை விரிவாக்கம் செய்ய தேசிய ஊரக நலத்திட்டத்திற்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
- 2022 - 23ஆம் நிதியாண்டில் 26 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் தோற்றுவிக்கப்பட்டு இயங்கவிருக்கிறது.
உயர் பிறப்பு வரிசையில் நிகழும் பேறுகால மரணம் மற்றும் சிசு மரணங்களை குறைக்கும் பொருட்டு உயர் பிறப்பு வரிசை விகிதத்தை குறைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. - டாம்ப்கால் சன் ஸ்கிரீன் லோஷன், டாம்ப்கால் புஞ்சை எதிர்ப்பு கிரீம், டாம்ப்கால் வலி நிவாரண கிரீம், டாம்ப்கால் செறிவூட்டப்பட்ட ஹேர் ஆயில் மற்றும் டாம்ப்கால் ஹெர்பல் ஹேர் டை ஆகியவை விரைவில் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. உயர் பிறப்பு வரிசையில் நிகழும் பேறுகால மரணம் மற்றும் சிசு மரணங்களை குறைக்கும் பொருட்டு உயர் பிறப்பு வரிசை விகிதத்தை குறைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
- டாம்ப்கால் சன் ஸ்கிரீன் லோஷன், டாம்ப்கால் புஞ்சை எதிர்ப்பு கிரீம், டாம்ப்கால் வலி நிவாரண கிரீம், டாம்ப்கால் செறிவூட்டப்பட்ட ஹேர் ஆயில் மற்றும் டாம்ப்கால் ஹெர்பல் ஹேர் டை ஆகியவை விரைவில் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
- தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்ததற்காக 2022ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் வரை 4372 குற்றங்கள் கண்டறியப்பட்டு 2 கோடியே 35 லட்சத்து 64 ஆயிரம் ரூபாய் அபராத தொகை விதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 2021 ஆகஸ்ட் மாதம் துவக்கப்பட்ட மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் மூலம் இதுவரை 2 கோடியே 76 லட்சத்து 90, 102 பேர் தொடர் சேவைகளை பெற்றுள்ளனர்.
- 2023ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் 29 பணிப்பிரிவுகளில் 4133 பணியிடங்களுக்கான தேர்வுகள் நடத்தி முடித்திட திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றது.