டெல்லி கான்ட் பகுதியிலுள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி நேற்று காலமானார். இதையடுத்து, பல்வேறு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் அவருடைய மறைவிற்கு இரங்கல் தெரிவித்தனர்.
பிரணாப் முகர்ஜிக்கு மரியாதை செலுத்தும் விதமாக தமிழ்நாடு அரசு 7 நாள் துக்கம் அனுசரிப்பு!
சென்னை: மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு மரியாதை செலுத்தும் விதமாக தமிழ்நாடு அரசு சார்பில் ஏழு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
பிரனாப் முகர்ஜி
இந்நிலையில், பிரணாப் முகர்ஜிக்கு மரியாதை செலுத்தும் விதமாக தமிழ்நாடு அரசு சார்பில் ஏழு நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும், அரசு அலுவலகங்களில் உள்ள தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிடபட்டுள்ளது.