தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

500 சிலம்ப கலைஞர்கள் தொடர்ந்து 8 மணி நேரம் சிலம்பம் சுற்றி உலக சாதனை

சிலம்ப கலைஞர்களுக்கு நலவாரியம் அமைத்து தரக்கோரி 500 சிலம்ப கலைஞர்கள் தொடர்ந்து 8 மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனை படைத்தனர்.

500 சிலம்ப கலைஞர்கள் தொடர்ந்து 8 மணி நேரம் சிலம்பம் சுற்றி உலக சாதனை-தமிழ்நாடு அரசு நலவாரியம் அமைக்க கோரிக்கை
500 சிலம்ப கலைஞர்கள் தொடர்ந்து 8 மணி நேரம் சிலம்பம் சுற்றி உலக சாதனை-தமிழ்நாடு அரசு நலவாரியம் அமைக்க கோரிக்கை

By

Published : May 17, 2022, 9:42 AM IST

சென்னை :பாரம்பரிய சிலம்ப கலையை வளர்க்கும் நோக்கிலும், விளையாட்டு துறையில் சிலம்பம் வீரர்களுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு வழஙகியதற்கும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தும் யுனைடெட் சிலம்பம் ஸ்போர்ட்ஸ் பெடரேசன் சார்பில் உலக சாதனை நிகழ்ச்சி சென்னை செயிண்ட் தாமஸ் மவுண்டில் உள்ள ஆர்.சி.எம் பள்ளி வாளகத்தில் நடைபெற்றது.

இதில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளுர், காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 500 க்கும் மேற்பட்ட சிலம்ப வீரர்கள் பங்கேற்று காலை 8 மணி முதல் மாலை 4 வரை தொடர்ந்து சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்தனர். உலக சாதனை படைத்த மாணவ, மாணவியர்களுக்கு நோபல் புக் ரெக்கார்ட்ஸ் உலக சாதனை விருது வழங்கி கவுரவித்தனர்.

இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த யுனைடெட் சிலம்பம் ஸ்போர்ட்ஸ் பெடரேசன் பொதுசெயலாளர் சத்தியராஜ் ஆசான் செய்தியாளரிடம் கூறும்போது, சிலம்பக் கலையை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் வகையிலும் சிலம்ப ஆசான்கள், சிலம்ப கலைஞர்களின் நலனையும் கருத்தில் கொண்டு சிலம்ப கலைஞர்களுக்கு நலவாரியம் அமைத்துத் தரவேண்டும் என தெரிவித்தார்.

இதையும் படிங்க:செஸ் ஒலிம்பியாட் போட்டி; தமிழ்நாடு அரசுடன் ஒப்பந்தம் கையெழுத்து

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details