தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

5 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 5PM

ஈடிவி பாரத்தின் 5 மணி செய்திச் சுருக்கம்.

5-pm-news
5-pm-news

By

Published : Jul 23, 2020, 5:03 PM IST

முதலமைச்சரை சமூக ஊடகங்களில் விமர்சிப்பது சரியா? - தணிகாசலத்திடம் உயர் நீதிமன்றம் கேள்வி

கரோனா தடுப்பு மருந்து குறித்து முதலமைச்சரை சமூக ஊடகங்களில் விமர்சித்த வழக்கில்,முதலமைச்சரை சமூக ஊடகங்களில் விமர்சிப்பது சரியா?என தணிகாசலத்திடம் உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

விவசாயிகளின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் - அமைச்சர் ஓ.எஸ். மணியன்

நாகை: பூம்புகார் அருகே கதவணை கட்ட பூமி பூஜையில் கலந்துகொண்ட அமைச்சர் ஓ.எஸ். மணியன் விவசாயிகளின் தலைமுறை தலைமுறையான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

கறுப்பர் கூட்டத்திற்கும் ஸ்டாலினுக்கும் என்ன சம்பந்தம் -பாஜக முருகன் கேள்வி!

சென்னை: கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறாகப் பேசிய கறுப்பர் கூட்டத்திற்கும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு என்ன சம்பந்தம்? என பாஜக மாநில தலைவர் முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்திய-சீன எல்லை விவகாரம்: நாளை பேச்சுவார்த்தை?

டெல்லி: இந்திய-சீன எல்லை விவகாரம் தொடர்பாக நாளை இருதரப்பு ஒருங்கிணைப்பு- ஆலோசனைக் குழுவின் கூட்டம் நடைபெறவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

குழந்தைகளின் ஆன்லைன் கல்விக்காக பசுமாட்டை விற்று ஸ்மார்ட்போன் வாங்கிய தந்தை!

இமாச்சல பிரதேசத்தின் காங்க்ரா மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் தனது குழந்தைகளின் ஆன்லைன் கல்விக்காக ஸ்மார்ட்போன் வாங்க தனது பசுவை 6000 ரூபாய்க்கு விற்றுள்ளார். இப்போது அவரது குழந்தைகள் தங்கள் வீட்டிலிருந்து ஆன்லைன் வகுப்புகள் மூலம் கல்வி கற்று வருகின்றனர்.

உடல்நிலையை காரணம் காட்டி வரவர ராவ் பிணை கோருவதில் உள்நோக்கம் உள்ளது - தேசிய புலனாய்வு முகமை

பீமா கோரேகான் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட சமூக செயற்பாட்டாளரும் கவிஞருமான வரவர ராவ் உடல்நிலையை காரணம் காட்டி பிணைக் கோருவதில் உள்நோக்கம் உள்ளது என மும்பை நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வு முகமை தெரிவித்துள்ளது.

'வாடிவாசல்' ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட படக்குழு!

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகிவரும் 'வாடிவாசல்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் 2020 தொடரில் வீட்டிலிருந்தே வர்ணனை சாத்தியமே - இர்பான் பதான்

டெல்லி: ஐபிஎல் 13ஆவது சீசனில் வீட்டிலிருந்தே வர்ணனை செய்யும் புதுமையான முயற்சியை, போட்டியை ஒளிபரப்பு செய்யும் நிறுவனம் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளனர்.

புர்கா அணிய தடைவிதித்த ஜெர்மனி!

பெர்லின்: மேற்கு ஜெர்மனியிலுள்ள பாடென்-வுர்ட்டம்பெர்க் மாநில அரசு பள்ளிகளில் மாணவிகள் புர்கா உள்ளிட்ட முகத்தை மறைக்கும் துணிகளை அணிய தடைவிதித்துள்ளது.

பரவிய தீ... அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து வீசப்பட்ட குழந்தைகள்! வைரல் காணொலி

பிரான்ஸ்: தீப்பிடித்த 40 அடி உயர அடுக்குமாடி குடியிருப்பு வீட்டிலிருந்து வெளியே வீசப்பட்ட இரு குழந்தைகளை அக்கம்பக்கத்தினர் காயமின்றி காப்பாற்றினர்.

ABOUT THE AUTHOR

...view details