தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இடைத்தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்; அதிமுக அறிவிப்பு!

சென்னை: சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் என இடைத்தேர்தல் நடக்க இருக்கும் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு தேர்தல் பொறுப்பாளர்களை அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

அதிமுக தலைமை

By

Published : Apr 22, 2019, 9:56 PM IST

Updated : Apr 23, 2019, 4:41 PM IST

இது தொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மே 19 ஆம் தேதி நடக்கிறது. இதை முன்னிட்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக, கீழ்க்காணும் தொகுதிகளுக்கு தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக, பின்வரும் மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் நியமிக்கப்படுகிறார்கள்.

1) சூலூர் தொகுதிக்கென ஒதுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்:

1. கோவை புறநகர், 2.கோவை மாநகர், 3.திருப்பூர் மாநகர், 4.திருப்பூர் புறநகர், 5.நீலகிரி, 6. நாகப்பட்டினம், 7. விழுப்புரம் வடக்கு, 8. விழுப்புரம் தெற்கு, 9. திருவள்ளூர் கிழக்கு, 10. திருவள்ளூர் மேற்கு, 11.பெரம்பலூர், 12. தென் சென்னை வடக்கு,13. வட சென்னை வடக்கு (மேற்கு).

2) அரவக்குறிச்சி தொகுதிக்கென ஒதுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்:

1. கரூர், 2. நாமக்கல், 3. சேலம் புறநகர், 4. சேலம் மாநகர், 5. தருமபுரி, 6. திருச்சி மாநகர், 7. திருச்சி புறநகர், 8. வேலூர் கிழக்கு, 9. வேலூர் மேற்கு, 10. திருவண்ணாமலை வடக்கு, 11.திருவண்ணாமலை தெற்கு, 12. ஈரோடு மாநகர், 13. ஈரோடு புறநகர், 14. தென் சென்னை தெற்கு.

3) திருப்பரங்குன்றம் தொகுதிக்கென ஒதுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் :

1.மதுரை மாநகர், 2. மதுரை புறநகர் கிழக்கு, 3.மதுரை புறநகர் மேற்கு, 4.தேனி, 5. திண்டுக்கல், 6.காஞ்சிபுரம் கிழக்கு, 7.காஞ்சிபுரம் மத்தியம், 8.கிருஷ்ணகிரி மேற்கு, 9.கிருஷ்ணகிரி கிழக்கு, 10.கிருஷ்ணகிரி மேற்கு, 11.கடலூர் கிழக்கு, 12.கடலூர் மேற்கு, 13. சிவகங்கை, 14. தஞ்சாவூர் வடக்கு, 15. தஞ்சாவூர் தெற்கு, 16. வட சென்னை தெற்கு,17. வட சென்னை வடக்கு (கிழக்கு)

4) ஓட்டப்பிடாரம் தொகுதிக்கென ஒதுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் :

1. தூத்துக்குடி வடக்கு, 2. தூத்துக்குடி தெற்கு, 3. புதுக்கோட்டை, 4. விருதுநகர், 5. திருவாரூர், 6. திருநெல்வேலி மாநகர், 7. திருநெல்வேலி புறநகர், 8. கன்னியாகுமரி கிழக்கு, 9. கன்னியாகுமரி மேற்கு,10. ராமநாதபுரம், 11. அரியலூர்.

சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கென ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த, தலைமைக் கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், கழக செய்தித் தொடர்பாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள், மாவட்டக் கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அமைப்புகளின் நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூராட்சி மற்றும் பகுதிக் கழகச் செயலாளர்கள் அனைவரும் தேர்தல் பணியாற்றுவார்கள்.

சம்பந்தப்பட்ட சட்டப்பேரவை தொகுதிகளைச் சேர்ந்த கழக நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும், தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி, சிறப்பான முறையில் தேர்தல் பணிகளை ஆற்றிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Last Updated : Apr 23, 2019, 4:41 PM IST

ABOUT THE AUTHOR

...view details