தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கருக்காகுறிச்சி வனப் பகுதியில் 3000 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் அழிப்பு!

புதுக்கோட்டை: கறம்பக்குடி ஒன்றியம் கருக்காகுறிச்சி பகுதிக்குள்பட்ட அடர்ந்த வனப் பகுதியில் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தலைமையில் நடத்தப்பட்ட அதிரடி ரெய்டில் 3000 லிட்டர் கள்ளச்சாராய ஊறலை காவல் துறையினர் அழித்தனர்.

கருக்காகுறிச்சி வனப் பகுதியில்  3000 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் அழிப்பு!
கருக்காகுறிச்சி வனப் பகுதியில் 3000 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் அழிப்பு!

By

Published : May 15, 2021, 8:18 PM IST

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி ஒன்றியம், கருக்காகுறிச்சி பகுதிக்கு உள்பட்ட அடர்ந்த வனப்பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்காக ஊறல் போடபட்டிருப்பதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணனுக்கு ரகசியத் தகவல் வந்தது.

இதையடுத்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தலைமையில் வடகாடு காவல் துறையினரும் அதிரடிப்படையினரும் கருக்காகுறிச்சி வனப்பகுதிக்கு விரைந்தனர். அங்கு சோதனை நடத்தப்பட்டதில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்காக 3,000 லிட்டர் ஊறல் போடப்பட்டிருப்பது தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து, அந்த ஊறல் பேரல்களை கைப்பற்றி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் காவல் துறையினர் அழித்தனர். இது குறித்து வடகாடு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: ஆக்சிஜன், ரெம்டெசிவிரை கள்ளச்சந்தையில் விற்றால் குண்டர் சட்டம் பாயும்!

ABOUT THE AUTHOR

...view details