தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மின்சாரத் துறைக்கு 300 கோடி இழப்பு - அமைச்சர் தங்கமணி

சென்னை: தொழிச்சாலைகள் இயங்காததால் மின்சாரத்துறைக்கு 300 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது என மின்சாரத்துறை அமைச்சர் பி. தங்கமணி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் பி. தங்கமணி
தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் பி. தங்கமணி

By

Published : Mar 30, 2020, 7:02 AM IST

தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் பி. தங்கமணி இன்று செய்தியாளரைச் சந்தித்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது;

"ஊரடங்கு அமலுக்கு வந்த நான்கு நாள்களில் அரசுக்கு 300 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தற்போது வீடுகளுக்கான மின்சாரத் தேவை அதிகரித்துள்ளது ஊரடங்கு காரணமாக தொழிச்சாலைகள் இயக்கவில்லை இதனால் 4500 மெகாவாட் மின்தேவை குறைத்துள்ளது. ஏப்ரல் 14 வரை மின்கட்டணம் செலுத்தவில்லை என்றாலும் எங்கேயும் மின் இணைப்பு துண்டிக்கப்படாது. திருவண்ணாமலையில் தெரியாமல் மின் இணைப்பை துண்டித்துவிட்டோம், அந்த செய்தி கிடைத்த உடன் அதை சரிசெய்துவிட்டோம்.

தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் பி. தங்கமணி
மேலும் தமிழ்நாட்டில் ஒரு அணுமின்நிலையம் தவிர மற்ற அனைத்து அணு மின்நிலையங்களையும் நிறுத்திவிட்டோம் மற்றபடி மத்திய அரசிடமிருந்து வருகின்ற மின்சாரம், சூரிய மின்சாரம், காற்றாலை மின்சாரம் இதுவே போதுமான அளவில் இருக்கிறது. மின்தடைகள் ஏற்பட்டால் 1912 என்ற எண்ணை அழைத்து புகார் தெரிவிக்கலாம். கரோனா வைரஸ் பரவும் நிலையிலும் எங்கள் மின்வாரிய ஊழியர்கள் மக்களுக்காக தடை இல்லாமல் மின்சாரம் வழங்கி வருகின்றனர். அவர்களுக்கு எங்கள் பாராட்டு, நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்" என்றார்.

இதையும் படிங்க: #1yearofSuperDeluxe - அநீதிகளை உடைத்த அநீதி கதைகள்

ABOUT THE AUTHOR

...view details