தமிழ்நாடு

tamil nadu

கடற்படை தளங்களைச் சுற்றி 3 கி. மீ., தூரத்துக்கு ட்ரோன்கள் பறக்கத் தடை!

By

Published : Aug 18, 2021, 7:43 PM IST

உரிய அனுமதியின்றி கடற்படை தளங்களுக்கு அருகே பறக்கும் ஆளில்லா விமானங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என இந்திய கடற்படை எச்சரித்துள்ளது.

No Fly Zone
ட்ரோன்

ஜம்மு-காஷ்மீரில் உள்ள ராணுவ நிலை மீது, பயங்கரவாதிகள் ஆளில்லா பறக்கும் விமானம் மூலம் தாக்குதல் நடத்திய நிலையில், இந்திய கடற்படை தளங்களைச் சுற்றி மூன்று கிலோமீட்டர் தொலைவில் அனுமதியின்றி ஆளில்லா விமானங்கள் உள்ளிட்ட பறக்கும் சாதனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய கடற்படை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது, "உரிய முன் அனுமதியின்றி தனி நபர்கள் மற்றும் குடிமை அமைப்புகள் ஆளில்லா விமானங்களைப் பறக்கவிடக்கூடாது .

அனுமதியின்றி கடற்படை தளங்களுக்கு அருகே பறக்கும் ஆளில்லா விமானங்கள் உள்ளிட்ட பறக்கும் சாதனங்கள் சுட்டு வீழ்த்தப்படும் அல்லது பறிமுதல் செய்யப்படும். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

தனி நபர்கள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட அனைவரும் ஆளில்லா விமானங்கள் பறக்கவிட குடிமை விமானப் போக்குவரத்து பொது இயக்குநரகத்திடம் (DGCA) முன் அனுமதி பெற்ற ஆவணங்களை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்படை தலைமையகம், ஆளில்லா விமானம் பறக்க திட்டமிட்டப் பகுதியில் உள்ள கடற்படை தளத்திடம் குறைந்தது ஒரு வாரத்துக்கு முன்பாக சமர்ப்பிக்க வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:ஆயில் மில்லுக்கு வந்த டேங்கர் லாரியில் 4 டன் பாமாயில் திருட்டு - போலீஸ் விசாரணை

ABOUT THE AUTHOR

...view details