அண்ணாமலைப் பல்கலைக்கழகம் 2013ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசால் கையகப்படுத்தப்பட்டது. பல்கலைக்கழகத்தில் கூடுதலாகப் பணிபுரிந்த 2,635 ஊழியர்கள் நிர்வாகக் காரணங்களுக்காக வேறு துறைகளுக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.
அவர்களுக்கு வழங்கப்பட்ட பணி நீட்டிப்பு மே மாதத்துடன் முடிவடைகிறது. எனவே மீண்டும் அவர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்க வேண்டும் என அண்ணாமலைப் பல்கலைக்கழக பதிவாளர் உயர் கல்வித் துறை செயலருக்கு கடிதம் எழுதியிருந்தார்.
அதனடிப்படையில், உயர் கல்வித் துறை செயலர் அபூர்வா வெளியிட்டுள்ள அரசாணையில், ”அண்ணாமலைப் பல்கலைக்கழக பதிவாளரின் கடிதத்தை அரசு நன்கு பரிசீலனைசெய்து, பல்கலைக்கழகத்தில் உபரியாக உள்ள 2,635 உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள், உதவி திட்ட அலுவலர், எலக்டீசியன், அலுவலக உதவியாளர், வாட்ச்மேன், தோட்டப் பணியாளர் ஆகியோரை மறு பணியிடத்தில் அரசு நியமனம் செய்தது.
தலைமைச் செயலகம், அரசின் பிற துறைகள், பொதுத் துறை நிறுவனங்கள் ஆகியவற்றில் அடுத்த மூன்றாண்டுகளுக்கு பணிபுரிவதற்கு அரசு அனுமதித்து உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:கரோனா தடுப்பு ஆராய்ச்சியில் ஈடுபடும் மதுரை காமராஜர் பல்கலைக்கழைகம்!