தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

192 அரசு கல்லூரிப்பேராசிரியர்கள் பணியிட மாற்றம்

அரசுக்கல்லூரிகளில் பணிபுரிந்து வந்த 192 பேராசிரியர்களுக்கு பணியிட மாறுதல் வழங்கப்பட்டுள்ளது.

அரசு கல்லூரி பேராசிரியர்கள் பணியிட மாற்றம்
அரசு கல்லூரி பேராசிரியர்கள் பணியிட மாற்றம்

By

Published : Dec 15, 2022, 3:53 PM IST

சென்னை:தமிழ்நாடு அரசு கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களுக்கான பணியிடமாறுதல் கலந்தாய்வு இறுதியாக 2018ஆம் ஆண்டு நடைபெற்றது. அதன் பின்னர் கடந்த 4ஆண்டுகளாக அரசு கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் பேராசிரியர் சங்கங்கள் இடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர்.

இதனைப் பரிசீலித்து ஆன்லைன் மூலம் இடமாறுதல் கலந்தாய்வுக்கான வழிகாட்டு நெறிமுறை அரசாணை நவம்பர் 8ஆம் தேதி வெளியிட்டது. அதன் அடிப்படையில் www.tngasa.in என்ற ஆன்லைன் முகவரி மூலமாக பெறப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டன.

569 விண்ணப்பங்களில் காலிப்பணியிடமின்மை மற்றும் 50 சதவீதத்திற்கும் குறைவான எண்ணிக்கையில் பேராசிரியர்கள் பணிபுரியும் இடங்கள் ஆகியவை தவிர 192 பேராசிரியர்கள் அவர்கள் விருப்பப்படி தேர்வு செய்த அரசு கல்லூரிகளுக்கு வெளிப்படையான பணியிடமாறுதல் வழங்கப்படவுள்ளன. அதன் அடையாளமாக 10 கல்லூரி பேராசிரியர்களுக்கு உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி உத்தரவுகளை இன்று வழங்கி உள்ளார்.

இதையும் படிங்க: 1,895 கௌரவ விரிவுரையாளர்கள் தற்காலிக நியமனம் - அமைச்சர் பொன்முடி அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details