பல்வேறு நாடுகளிலிருந்து சுற்றுலா விசாவில் இந்தியா வந்த பயணிகள் ஊரடங்கினால், பல்வேறு பகுதிகளில் சிக்கிக் கொண்டனர். இதனால், சுற்றுலா விசாவில் வந்தவர்களால் தங்களது சொந்த நாட்டிற்குத் திரும்ப முடியவில்லை.
இந்நிலையில், சுற்றுலா விசாவில் வந்தவர்கள் தங்கள் சொந்த நாட்டிற்குச் செல்ல கடந்த சில நாள்களாக சென்னையிலிருந்து அமெரிக்கா, பிரான்ஸ், மலேசியா, ஜப்பான், சிங்கப்பூர், பூடான் உள்ளிட்ட நாடுகளுக்கு சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டன.
சிறப்பு விமானத்தில் பயணம் செய்த பயணிகள் தமிழ்நாட்டில் மேலும் தங்கியுள்ள வெளிநாட்டுப் பயணிகளை சிறப்பு விமானங்கள் மூலம் அழைத்துச் செல்ல, மத்திய அரசு அனுமதியளித்ததைத் தொடர்ந்து, சென்னையிலிருந்து வங்கதேசத் தலைநகரமான டாக்காவிற்கு இதுவரை மூன்று சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன.
நேற்று இயக்கப்பட்ட சிறப்பு விமானத்தில், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிக்கியிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த 167 பேர் அழைத்துச் செல்லப்பட்டனர். அதில் 10 குழந்தைகள், 50 பெண்கள் அடங்குவர்.
இதையும் படிங்க:சொந்த மாநிலத்திற்குத் திரும்பிய வடமாநில தொழிலாளர்கள்!