தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

150 மில்லி பால் பாக்கெட், சிறிய பிரட் பாக்கெட்: குஷ்புவின் தாராள நிவாரண உதவி

மழை வெள்ள பாதிப்பில் திமுகவில் முதலமைச்சரைத் தவிர யாரும் வேலை பார்க்கவில்லை. முதலமைச்சரும் போட்டோவுக்காகத்தான் சென்றார் என பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு தெரிவித்துள்ளார்.

குஷ்பு
குஷ்பு

By

Published : Nov 16, 2021, 10:52 PM IST

சென்னை:பட்டினப்பாக்கத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு பாஜக சார்பில் நிவாரண உதவியாக 150 மில்லி பால் பாக்கெட் மற்றும் பிரட் பாக்கெட் ஒன்றைக் அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த குஷ்பு, "மழை வெள்ளப் பாதிப்பில் திமுகவில் முதலமைச்சரைத் தவிர யாரும் வேலை பார்க்கவில்லை. முதலமைச்சரும் போட்டோவுக்காகத்தான் சென்றார்.

ஸ்டாலின் செய்தது என்ன?

கொளத்தூர் தொகுதியில் முழுவதுமாக மழை வெள்ளம் சூழ்ந்தது. 10 ஆண்டில் சட்டப்பேரவை உறுப்பினராக ஸ்டாலின் கொளத்தூரில் செய்தது என்ன, தொகுதியை கூட சரியாகப் பார்க்க முடியாதவர், தமிழ்நாட்டை எப்படிப் பார்ப்பார்..? மழை வெள்ள பாதிப்பு மீட்புப் பணியில் தன்னார்வலர்கள், தன்னார்வ அமைப்புகள் அதிமுக, பாஜகதான் வேலை பார்த்தனர்.

குஷ்பு

மழை பாதிப்புக்கு அதிமுகதான் காரணம் எனத் திமுகவினர் கூறுகின்றனர். கடவுள் அதிமுக சொல்வதைக் கேட்டுக் கன மழை பெய்ய வைக்கிறாரா..? அதிமுக வானத்திற்கு போன் செய்து மழை வர வைத்ததா..?

2011 வரை ஆட்சியில் இருந்தது திமுகதான். ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்படுவது இயல்புதான். அதிமுக மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்த திமுகவுக்கு உரிமை இல்லை. கொளத்தூரை முதலில் ஸ்மார்ட் சிட்டி ஆக்கட்டும் ஸ்டாலின்.

சூர்யா இன்னும் உதவவில்லை

ஜெய் பீம் படம் இன்னும் பார்க்கவில்லை. பார்த்த பிறகு கூறுகிறேன். கதாபாத்திரத்தின் உண்மையான நபருக்கு சூர்யா இன்னும் உதவவில்லை எனக் கூறுகின்றனர்.

சூர்யாவுக்கு ஆதரவு கொடுத்தே ஆக வேண்டும் என எனக்கு நிர்ப்பந்தம் இல்லை. தன்னை பாதுகாத்துக் கொள்வது எப்படி என சூர்யாவுக்கு நன்றாகத் தெரியும்.

குஷ்பு
அண்ணாமலை முதலமைச்சர் ஆவார்

இங்கு நிகழ்ச்சி 10.30 என மணிக்குத்தான் என என்னிடம் சொல்லி இருந்ததால் தாமதமாக வந்தேன். தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர் எங்கே சென்றார் எனக் கேள்வி எழுப்பினார்.

நேரம் வரும்போது அண்ணாமலை முதலமைச்சர் ஆவார். தகுதி இருந்தால் அவர் கண்டிப்பாக முதலமைச்சர் ஆவார் " என்று கூறினார்.

குஷ்பு
ஒரு துண்டு பிரட் கூட அமிர்தம்
குஷ்பு

நிவாரண உதவியாகச் சிறிய பால் பாக்கெட்டும் , பிரட் பாக்கெட் ஒன்றும் மட்டுமே வழங்கப்படுவது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த குஷ்பு, பசியில் இருப்பவர்களுக்கு ஒரு துண்டு பிரட் கூட அமிர்தம் போல் இருக்கும் என்று கூறி சமாளித்தார்.

ஒருவேளைக்குக் கூட உதவாது

குஷ்பு

மேலும், தனது பதிலுக்கு வலு சேர்க்கும் வகையில் அங்கிருந்த பெண்களிடம் உங்களுக்குக் கிடைத்த நிவாரணம் திருப்தியானதுதானே என குஷ்பு கேட்ட நிலையில், அவர் எதிர்பாராத வகையில் வரிசையில் நின்ற பெண் ஒருவர், இன்னும் கூடச் செய்தால் நன்றாக இருக்கும்.

பிரட், பால் பாக்கெட் ஒருவேளைக்குக் கூட உதவாது, 5 கிலோ அரசி கொடுத்திருக்கலாம்" என்று கூறினார். உடனே சுதாரித்த குஷ்பு இது முதல் அடிதான் எனவும் அடுத்தடுத்து உதவி செய்வோம் என்றும் கூறி செய்தியாளர் சந்திப்பை முடித்துக் கொண்டார்.

இதையும் படிங்க:பதவி உயர்வு பெறும் ஆசிரியர்களுக்கு செக் - விரைவில் புதிய விதிமுறைகள்

ABOUT THE AUTHOR

...view details