சென்னை: ஐஐடி முன்னாள் மாணவர்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 2021-22ஆம் ஆண்டில் அதிகத்தொகையாக ரூ.131 கோடியை அக்கல்வி நிறுவனம் திரட்டியுள்ளது.
முன்னாள் மாணவர்களுடனான தொடர்புகளை வலுப்படுத்துதல், பெருநிறுவனங்கள், நன்கொடையாளர்கள், பெரும் செல்வந்தர்கள் ஆகியோரை அதிகளவில் ஈடுபடுத்துதல் போன்ற செயல்பாடுகள் மூலம் விரைந்து நிதி திரட்ட சென்னை ஐஐடி கல்வி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
கோவிட்-19 நோய்த்தொற்று காலத்திலும், முன்னாள் மாணவர்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் மூலம் திரட்டப்பட்ட தொகை முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 30 விழுக்காடு அதிகரித்துள்ளது. பெருநிறுவனங்கள் சமூகப்பொறுப்புணர்வு (CSR) ஒத்துழைப்பு மூலம் திரட்டப்பட்ட ரூ.131 கோடியில் ஏறத்தாழ பாதித்தொகை கடந்த நிதியாண்டில் தான் பெறப்பட்டுள்ளது.
முன்னாள் மாணவர்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் மூலம் சென்னை ஐஐடிக்கு கிடைத்த ரூ.131 கோடி நன்கொடை!
ஐஐடி முன்னாள் மாணவர்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகத் தொகையாக 2021-22ஆம் ஆண்டில் ரூ.131 கோடியை திரட்டியுள்ளது
முன்னாள் மாணவர்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனத்தின் மூலம் சென்னை ஐஐடியில் 131 கோடி நன்கொடை
சென்னை ஐஐடி-யின் பேராசிரியர்கள் மேற்கொண்டு வரும் முன்னோடி ஆராய்ச்சிப் பணிகள், சமூகம் சார்ந்த திட்டங்கள் ஆகியவற்றால் இந்த அளவுக்கு நிதி திரட்ட முடிந்துள்ளது.
உள்கட்டமைப்பு மேம்பாடு, கல்வி உதவித்தொகை, ஆராய்ச்சிப் பேராசிரியர்களுக்கான விருதுகள், ஆராய்ச்சிப் பணி ஆகியவற்றுடன், கோவிட்-19 நோய்த்தொற்றின் தாக்கத்தைத் தணிக்கும் நடவடிக்கைகளுக்கு இந்தத் தொகை உதவிகரமாக இருந்து வருகிறது.
நோய்த்தொற்றுக் காலத்தில், உலகம் முழுவதும் உள்ள சென்னை ஐஐடி முன்னாள் மாணவர்களிடமிருந்து நிவாரணத் திட்டங்களுக்காக ரூ.15 கோடியை (ஏறத்தாழ 2 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) திரட்டியது. வென்டிலேட்டர் (BiPAP), ஆக்சிஜன் செறிவூட்டல் இயந்திரம் போன்ற அத்தியாவசிய மருத்துவ சாதனங்களை தமிழ்நாடு, கர்நாடகா, தெலங்கானா ஆகிய மாநில அரசுகளுக்கு வழங்க இந்தத் தொகை பயன்படுத்தப்பட்டது.
அனைத்துத் திட்டங்களும் திறம்பட நிர்வகிக்கப்படுவதை உறுதிசெய்யும் வகையில், தொழில்முறை நன்கொடையாளர் பணிக்குழு இயங்கி வருகிறது. நன்கொடை முழுவதும் பயனுள்ள வகையிலும் தீர்வுகளை எட்டும் வகையிலும் சென்றடைய வேண்டும் என்றே அனைத்து நன்கொடையாளர்களும் விரும்புகின்றனர். அவர்களின் தேவைகள் அனைத்தையும் நாங்கள் நிறைவு செய்கிறோம்’ எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பிரதமர் மோடி சென்னை வருகை - ஸ்டாலினின் திட்டம் உண்மையாகுமா?