சென்னை:தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 6ம் தேதி தொடங்கியது. 9 லட்சத்து 38 ஆயிரத்து 291 பேர் தேர்வை எழுத விண்ணப்பித்திருந்தனர். தமிழ்நாட்டில் 4 லட்சத்து 66 ஆயிரத்து 765 மாணவர்கள், 4 லட்சத்து 55 ஆயிரத்து 960 மாணவிகள் தேர்வை எழுதினர். தமிழ்நாட்டில் மட்டும் 3,976 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
10ம் வகுப்பு பொதுத்தேர்வு நிறைவு: மே 19ம் தேதி முடிவுகள் வெளியீடு! - தமிழ்நாடு செய்திகள்
10ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்றுடன் நிறைவடைந்த நிலையில், மே 19ம் தேதி முடிவுகள் வெளியாக உள்ளன.
புதுச்சேரியில் 7,911 மாணவர்கள், 7,655 மாணவிகள் என 15,566 பேர் பொதுத்தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். 37,798 பேர் தனித்தேர்வர்களாக விண்ணப்பம் செய்தனர். இந்நிலையில் இன்று (ஏப்ரல் 20) சமூக அறிவியல் தேர்வு நடைபெற்ற நிலையில், பொதுத்தேர்வு நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் 70க்கும் மேற்பட்ட மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணிகள் வரும் 24ம் தேதி முதல் மே 3ம் தேதி வரை நடைபெற உள்ளது. மே 19ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.