மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, சென்னையில் 806 பேர் இன்று கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தமாக 16 ஆயிரத்து 585 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். செங்கல்பட்டில் புதிதாக 82 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் ஒரேநாளில் 806 பேருக்கு கரோனா
18:06 June 02
சென்னையில் இன்று ஒரேநாளில் 806 பேருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் மொத்தமாக 15 ஆயிரத்து 394 ஆண்களும், ஒன்பதாயிரத்து 179 பெண்களும், 13 திருநங்கைகளும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஐந்து லட்சத்து 14 ஆயிரத்து 433 பேருக்கு மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நான்கு லட்சத்து 90 ஆயிரத்து 804 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 44 அரசு பரிசோதனை மையங்களும், 29 தனியார் பரிசோதனை மையங்களும் செயல்படுகின்றன.
தமிழ்நாட்டில் தொடர்ந்து மூன்றாவது நாளாக கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் (1,091) தாண்டியுள்ளது.
இதையும் படிங்க:வானூர்தி நிறுவனங்களுக்கு முதலமைச்சர் கடிதம்!