துபாயிலிருந்து இன்று (நவம்பர் 8) காலை ஏா்இந்தியா எக்ஸ்பிரஸ் மீட்பு விமானம் சென்னை சா்வதேச விமானநிலையத்திற்கு வந்தடைந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமானநிலைய சுங்கத்துறையினா் சோதனையிட்டனா்.
துபாயிலிருந்து வந்த மீட்பு விமானத்தில் 1.31 கிலோ தங்கம் கடத்தல்!
சென்னை: துபாயிலிருந்து வந்த மீட்பு விமானத்தில் கடத்திவரப்பட்ட ரூ.71.7 லட்சம் மதிப்புடைய 1.31 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.
அப்போது, சென்னையைச் சோ்ந்த முகமது ஆசிப்(24), ராமநாதபுரத்தைச் சோ்ந்த முகமது ஷெரீப்(39), அஜ்மீா் காஜா(26), நைனாா் முகமது(53), புதுக்கோட்டையைச் சோ்ந்த சாகுல்ஹமீது(23), திருச்சியைச் சோ்ந்த ஜெகதீஷ்(54) ஆகிய 6 பேரும் சந்தேகத்திற்கிடமான வகையில் நடந்துகொண்டதை சுங்கத்துறையினர் கவனித்தனர். இதற்கிடையில், ஆறு பேரும் தங்களிடம் சுங்கத் தீர்வை செலுத்தும் பொருள்கள் எதுவும் இல்லை என்று கூறிவிட்டு கிரீன் செனல் வழியாக வெளியே செல்ல முயற்சித்தனர்.
சந்தேகத்தின்பேரில் ஆறு பேரையும் தடுத்து நிறுத்திய சுங்கத்துறையினர், வலுக்கட்டாயமாக அழைத்து சென்று சோதனை நடத்தினர். அப்போது ஒவ்வொருவரின் உள்ளாடைகள் மற்றும் ஒருவரின் ஆசனவாய்க்குள் மறைத்து வைத்திருந்த தங்கக்கட்டிகள், தங்க பேஸ்ட்களை கைப்பற்றினா். ஆறு பேரிடமிருந்து சுமார் 1.31 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனா். அதன் சா்வதேச மதிப்பு ரூ. 71.7 லட்சம் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, ஆறு பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.