தமிழ்நாடு

tamil nadu

குழந்தைகள் காப்பகத்தில் தவறிய சிறுவன் - மீட்ட காவல்துறை

செங்கல்பட்டு: தனியார் குழந்தைகள் காப்பகத்தில் இருந்து தவறி வந்த ஏழு வயது சிறுவனை மீட்டு அரசு குழந்தைகள் நல மையத்தில் காவல்துறையினர் ஒப்படைத்தனர்.

By

Published : Sep 4, 2020, 10:30 PM IST

Published : Sep 4, 2020, 10:30 PM IST

ETV Bharat / state

குழந்தைகள் காப்பகத்தில் தவறிய சிறுவன் - மீட்ட காவல்துறை

Police have rescued a stray boy in Chengalpattu
Police have rescued a stray boy in Chengalpattu

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள வில்வராயநல்லூர் கிராமத்தில் துரைசாமி ஆதரவற்றோர் காப்பகம் உள்ளது. இதில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சிபுரம் அருகே உள்ள ஆசனம் பேட்டை பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் தனது இரண்டாவது மகன் ஸ்ரீதர் (5) என்பவரை படிக்க வைக்க போதிய வசதி இல்லாததால் சேர்த்துள்ளார்.

இந்தக் காப்பாகத்தில் இருந்து வழிதவறி வந்த அந்த சிறுவனை மதுராந்தகம் தேரடி தெருவில் உள்ள முருகன் கோவில் அருகே நேற்று (செப் 3) காவல்துறையினர் மீட்டனர். விசாரணையில் அச்சிறுவன் வில்வராயநல்லூர் துரைசாமி காப்பகத்திலிருந்து வழிதவறி வந்தது தெரிந்தது.

பிறகு மதுராந்தகம் காவல்துறையினர் சிறுவனின் பெற்றோருக்கு தகவல் அளித்துள்ளனர். தற்போது இந்த சிறுவனை செங்கல்பட்டில் உள்ள அரசு குழந்தைகள் நல காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details