தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 8, 2021, 7:52 PM IST

ETV Bharat / state

அரசுடமையாக்கப்பட்ட இளவரசி, சுதாகரின் சொத்துக்களைப் பார்வையிட்ட ஆட்சியர்!

தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிவிப்பின்படி அரசுடமையாக்கப்பட்ட சசிகலா உறவினர்கள் பெயரில் செய்யூரில் இருந்த சொத்துக்களை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் இன்று ஆய்வு செய்தார்.

chengalpattu district collector inspected ilavarasi suthakar property
அரசுடமையாக்கப்பட்ட இளவரசி,சுதாகரின் சொத்துக்களைப் பார்வையிட்ட ஆட்சியர்

செங்கல்பட்டு: சொத்துக்குவிப்பு வழக்கில், வி.கே. சசிகலா, அவரது உறவினர்கள் பெயரில் உள்ள சொத்துகளை அரசு பறிமுதல் செய்து அரசுடமையாக்க வேண்டும் என கடந்த 2017ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் கூறியது. அதனடிப்படையில், நேற்று (பிப்ரவரி 7) தமிழ்நாடு அரசு சசிகலாவின் உறவினரான இளவரசி, சுதாகர் ஆகியோருக்குச் சொந்தமான ஆறு சொத்துகள் அரசுடமையாக்கப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டது.

தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிவிப்பின்படி, செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரில் சிக்னோரா என்டர்பிரைசஸ் என்ற பெயரில் இருந்த சொத்துகள் அரசுடமையாக்கப்பட்டன. இந்நிலையில், அரசுடமையாக்கப்பட்ட சொத்துக்களை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ், மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் லட்சுமி பிரியா ஆகியோர் இன்று (பிப்ரவரி 8) பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இதையும் படிங்க: காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் இளவரசி, சுதாகரன் சொத்துக்கள் அரசுடமையாக்கம்!

ABOUT THE AUTHOR

...view details