தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘வேற்றுமையை மறந்து, மனிதநேயம் வளர்ப்போம்’ - வைகோ

சென்னை: இலங்கை தொடர் குண்டுவெடிப்புச் சம்பவம் குறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார்

‘வேற்றுமையை மறந்து, மனிதநேயம் வளர்ப்போம்’ - வைகோ

By

Published : Apr 26, 2019, 12:00 AM IST

அதில், “உலகம் முழுமையும், மதவாதமும், பேரினவாதமும் வலுப்பெற்று வளர்ந்து வருவது வேதனை அளிக்கின்றது. இலங்கையில் நடைபெற்ற கொடூரத் தாக்குதல்கள், மனிதநேயம் கொண்டோரைப் பதைபதைக்கச் செய்து இருக்கின்றது.

359 உயிர்களைப் பலி வாங்கி இருக்கின்ற இத்தாக்குதலுக்குப் பொறுப்பு ஏற்று இருக்கின்ற ஐ.எஸ் அமைப்பு, நியூசிலாந்து நாட்டில் மசூதி மீது நடைபெற்ற தாக்குதலுக்குப் பதிலடியாக இத்தாக்குதலை நடத்தி இருப்பதாகத் தெரிவித்து இருக்கின்றது. யாரோ ஒரு இனவெறியன் செய்த தவறுக்காக, எந்தக் குற்றமும் செய்யாத பொதுமக்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களது உற்றார், உறவினர்கள் கதறி அழும் காட்சிகள் நெஞ்சைப் பிளக்கின்றன.

நியூசிலாந்து தாக்குதலை யாரும் ஆதரிக்கவில்லை. உலகமே கண்டித்து இருக்கின்றது. பழிக்குப் பழி என்ற கருத்தை எந்த மதமும் போதிக்கவில்லை. அனைத்து மதங்களும், அன்பையும், அறத்தையுமே வலியுறுத்துகின்றன. இந்தியாவில் கடந்த ஐந்து ஆண்டுகால பாஜக, ஆர்.எஸ்.எஸ், சங் பரிவார் கும்பலின் வழிகாட்டுதலோடு, சிறுபான்மையினர் மீதான அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விட்டு இருக்கின்றது. அதனால், ஐ.எஸ் போன்ற வன்முறை இயக்கங்கள், இந்தியாவிலும் தாக்குதல் நடத்துகின்ற சூழல் உருவாகி இருக்கின்றது’ என்று தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details