பிற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் தேர்தல் நடத்துவது தான் கடினம்!
சென்னை: ஹரியானா, ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடத்துவதை விட தமிழகத்தில் தேர்தலை நடத்துவது என்பது மிகவும் சவாலானது என முன்னாள் இந்திய தேர்தல் ஆணையர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.
தரமணியில் உள்ள பிரஸ் இன்ஸ்டியூட் ஆப் இந்தியா என்ற இடத்தில் ’தேர்தலின்போது அனைத்து ஊடகங்களின் பங்கு’ என்கிற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் முன்னாள் இந்தியத் தேர்தல் ஆணையர் கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் தமிழ்நாடு தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா, மூத்த பத்திரிகையாளர் முராரி ஆகியோர் பங்கேற்றனர். இதில் செய்தியாளர் கேள்விகளுக்குப் பதிலளித்துப் பேசிய கிருஷ்ணமூர்த்தி,
’தான் பதவியிலிருந்தபோது மேற்கு வங்காளம், பீகார், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தேர்தலை நடத்தியது கடினமானது. ஆனால் தமிழ்நாட்டில் தேர்தலை நடத்தும் போது மிகச் சவாலாக இருந்தது. தமிழ்நாட்டில் இருக்கும் இரு பெரும் கட்சிகளும் தனக்கு மிரட்டல் கடிதம் அனுப்பியதாக, தெரிவித்தார்.
மேலும், தமிழ்நாட்டு ஊடகங்கள் தேர்தலின்போது தங்களது கண்ணியம் தவறாத வகையில் பொறுப்புடன் செயல்பட வேண்டும். பொதுமக்கள் பயணத்தின்போது 50 ஆயிரம் ரூபாய் வரை எடுத்துச் சென்றால் பறிமுதல் செய்யப்படுவது அதற்கு மேல் எடுத்துச் செல்ல தேவைப்பட்டால், உரிய ஆவணங்களுடன் எடுத்துச் செல்ல வேண்டும், என அறிவுறுத்தினார்.