நாடாளுமன்றத் தேர்தலுக்கான தமிழ்நாடு அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழ்நாட்டில் 39 தொகுதிகளும், புதுச்சேரியில் ஒரு தொகுதியும் என மொத்தம் 40 மக்களவைத் தொகுதிகளுக்கு தேர்தலும், தமிழ்நாட்டில் காலியாக இருக்கும் 21 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 18 இடங்களுக்கும் இடைத்தேர்தலும் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறுகிறது.
இதில் அதிமுக கூட்டணியில் அதிமுகவிற்கு 20 தொகுதிகளும், மத்தியில் ஆளும் பாஜகவிற்கு 5 தொகுதிகளும், பாமகவிற்கு 7 தொகுதிகளும், இதர கூட்டணி கட்சிகளுக்கு 8 தொகுதிகளும் பகிர்ந்தளிக்கப்பட்டன.
இந்நிலையில் இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், அதிமுகவின் 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை துணை ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.
அவை பின்வருமாறு...
- வறுகை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு மாதம் ரூ.1, 500 உதவித் தொகை
- உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் வேலை வாய்ப்பிற்கான திறன் மேம்பாட்டை உருவாக்க தேசிய அளவிலான அமைப்பு உருவாக்கப்படும்.
- விவசாயிகளின் கடன் சுமையை தீர்க்கும் வகையில் உறுதியான திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசை வலியுறுத்துவோம்.
- தமிழகத்தில் மூன்று புதிய நீர் மேலாண்மை திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
- நீர் வேலாண்மை திட்டம் செயல்படுத்த, மழைக்காலத்தில் சேமித்து, வறட்சி பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படும்.
- திருச்சி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், விருதுநகர் இணைப்பு கால்வாய் திட்டம்
- காவேரி-கோதாவரி இணைப்பு திட்டம் உடனடியாக துவங்க மத்திய அரசை வலியுறுத்தும்
- காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்தும்.
- மேற்குதொடர்ச்சி மலையில் பருவமழைக் காலங்களில் பெறும் நீரை பயன்படுத்த தடுப்பணை அமைத்து நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டம்
- கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு மாற்ற வலியுறுத்துவோம்.
- மாணவ, மாணவியர் உயர்கல்விக்கு பெற்ற கடனை தள்ளுபடி செய்ய மத்திய அரசை அதிமுக வலியுறுத்தும்.
- மருத்துவம் போன்ற உயர் கல்விகளில் சேர நீட் தேர்வில் இருந்து தமிழ்நாடு மக்களுக்கு விதி விலக்கு வழங்க மத்திய அரசை வலியுறுத்துவோம்.
- இந்தியாவில் அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்தும்
- புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு முழு மாநில அந்தஸ்து வழங்க மத்திய அரசை அதிமுக வலியுறுத்தும்.
- தனியார் துறைகளில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தப்படும்.
- எஸ்.சி எஸ்.டி இட ஒதுக்கீடு வேலைவாய்ப்பு, கல்வி வழங்க வலியுறுத்தல்
- இனப்படுகொலை குறித்து சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை மேற்கொள்ள மத்திய அரசை வலியுறுத்துவோம்.
- ஏழு தமிழர்களை ஆளுநர் விடுவிக்க மத்திய அரசையும், குடியரசுத்தலைவரையும் அதிமுக வலியுறுத்துவோம்.