அரியலூர் மாவட்டத்தில் உலகப் புகைப்பட தினத்தையொட்டி, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் விலையில்லா தலைக்கவசம் வழங்கினார்.
விழிப்புணர்வு ஏற்படுத்த விலையில்லா தலைக்கவசம் அளித்த ஆட்சியர்!
அரியலூர்: உலக புகைப்பட தினத்தையொட்டி சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பொதுமக்களுக்கு விலையில்லா தலைக்கவசத்தை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
பொதுமக்களுக்கு விலையில்லா ஹெல்மட்டை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
180ஆவது புகைப்பட தின விழாவை முன்னிட்டு மாவட்ட புகைப்பட கலைஞர்கள் சங்கத்தின் சார்பில், மாவட்ட ஆட்சியரகத்தில் தொடங்கிய தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் தொடங்கிவைத்தனர்.
நகரின் மிக முக்கிய வீதி வழியாக சென்ற பேரணி, அரியலூர் பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது.