தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

TODAY HOROSCOPE: அக்.12ஆம் தேதி ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய பலன்களைக் காணலாம்.

By

Published : Oct 12, 2022, 6:34 AM IST

Updated : Oct 12, 2022, 6:43 AM IST

Etv Bharat
Etv Bharat

மேஷம்:நீங்கள் உங்கள் திறமையை சிறந்த முறையில் வெளிப்படுத்துவீர்கள். திட்டங்களை சிறப்பாக தீட்டி, பணியில் சிறந்த வகையில் ஆலோசனைகளை வழங்கி, அதன் மூலம் சிறந்த பலனைப்பெறுவீர்கள். எனினும், அதற்கான அங்கீகாரம் சரியான முறையில் கிடைக்காததால், ஏமாற்றம் ஏற்படக்கூடும். தோல்விகளை ஏற்றுக் கொண்டு, மனம் வருந்தாமல் இருப்பது எப்படி என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

ரிஷபம்:இன்று நீங்கள், விதிக்கு கட்டுப்பட்டு நடக்கும் நிலைக்குத் தள்ளப்படுவீர்கள். விதியின்படி நடக்கட்டும் என்று நீங்கள் நினைத்துக் கொண்டாலும், நல்லவை நடக்கும் என்று நீங்கள் எதிர்பார்க்க வேண்டாம். தவறான முடிவுகளை எடுக்கும் வாய்ப்பு உள்ளது. மன வருத்தம் கொள்ளத் தேவையில்லை. வரும் காலத்தில் நல்லவையே நடக்கும்.

மிதுனம்: நீங்கள், அனைத்து செயல்களையும், சிறந்த வகையில் செய்ய வேண்டும் என்று விரும்புபவராக இருப்பீர்கள். உங்கள் செயல்திறன் முழுவதும், ஒரு குறிப்பிட்ட இலக்கை நோக்கி செய்யும் முயற்சியாக இருக்க வேண்டும் என்பதில் நினைவில் கொள்ளவும்.

கடகம்: நீங்கள் இன்று புதிய பொறுப்புகளை ஏற்றுக்கொள்வீர்கள். அதனால் நீங்கள் பணியில் தீவிரமாக இருப்பீர்கள். வேலை பளுவின் காரணமாக, நீங்கள் சோர்வாக உணரக்கூடும். அதனால் உங்களுக்கு மன அழுத்தம் பதற்றமும் உண்டாகும் வாய்ப்பும் உள்ளது.

சிம்மம்: நீங்கள் இன்று, உணர்வுப்பூர்வமாக செயல்படுவீர்கள். உங்களது அகங்காரம் காரணமாக, உங்களது உண்மையான உணர்வுகளை வெளிப்படுத்த நீங்கள் தயங்குவீர்கள். உங்களுக்கு மனதிற்குப் பிடித்தவர்கள் உடன் பேசும்போது, இதனை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். காதல் உணர்வு மற்றும் அன்பை வெளிப்படுத்துவதற்கு இது ஒரு சிறந்த நாளாக இருக்கும்.

கன்னி:இன்று, ஒரு இனம் புரியாத பயம் உங்கள் மனதை வாட்டிக் கொண்டிருக்கும். நேரம் ஆக ஆக, இந்த பயம் அதிகரித்து கொண்டிருக்கும். நீங்கள் உங்கள் வெளிநாட்டு நண்பர்களுக்காக, அதிகம் செலவழிக்கும் வாய்ப்பு உள்ளது. அதனால், இன்று நீங்கள் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.

துலாம்: உங்கள் குழந்தைகள் சாதனை புரிவார்கள். அவர்களை நினைத்து நீங்கள் பெருமை கொள்வீர்கள். ஊதிய உயர்வு அல்லது பரம்பரை சொத்துக்கள் மூலமாக கிடைக்கும் வருமானம் ஆகியவற்றால் பணவரவு இருக்கும். ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு அல்லது காப்பீட்டு திட்டங்கள் மூலமாக நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

விருச்சிகம்: உங்களுக்கு இன்று ஒரு சாதாரண நாளாகவே இருக்கும். உற்சாகம் தரக்கூடிய எதுவும் நடக்கும் சாத்தியம் இல்லை. எனினும், உற்சாகமாக செயல்பட்டு, வாழ்க்கையில் சுவாரசியத்தை புரிந்து கொண்டு முன்னேற தொடர்ந்து முயற்சி செய்யவும். கிரகங்கள் உங்களுக்கு சாதகமாக எப்பொழுது மாறும் என்று சொல்ல முடியாது. உற்சாகமான எதிர்காலம் காத்திருக்கிறது. நம்பிக்கை இழக்க வேண்டாம்.

தனுசு:வெளிநாட்டில் உள்ள உங்களது தொடர்புகள் காரணமாக, நீங்கள் உங்கள் வர்த்தகத்தை விரிவுபடுத்தும் வாய்ப்பு அதிகம் உள்ளது. உங்களது சிறந்த தகவல் தொடர்பு திறன் மூலம், இலக்குகளை எளிதாக அடைவீர்கள். உங்கள் துறையில், நீங்கள் சிறந்த தலைவனாக ஆக, சரியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவீர்கள்.

மகரம்: நீங்கள் முதலில் எடுத்த முயற்சி பலன் அளிக்கவில்லை என்றால், மீண்டும் முயற்சி செய்யவும். விடாமுயற்சி மற்றும் பொறுமையின் திறனை பலர் குறைவாக மதிப்பீடு செய்கின்றனர். எனினும், இந்த தன்மைகள் உங்களை வெற்றியடையச்செய்யும். கோபம் மற்றும் ஏமாற்ற உணர்வை ஏற்படுத்திக்கொள்வதற்கு பதிலாக நம்பிக்கையுடன், உங்கள் திட்டத்தில் மன உறுதியுடன் செயல்படவும். குறிப்பாக, நீங்கள் எதிர்பார்த்தபடி பலன் இல்லை என்றால், நம்பிக்கை இழக்கக் கூடாது.

கும்பம்:சிக்கலான விஷயங்களையும், நீங்கள் மிக எளிதாக கையாள்வீர்கள்! எனினும், தங்களது அனைத்து பணிகளையும் மற்றவர்கள் உங்களிடம் ஒப்படைத்து விடும் வாய்ப்புள்ளது. இதனால் உங்களுக்கு பிரச்னை ஏற்பட்டு, மற்றவர்கள் செய்யும் தவறுகளுக்கு நீங்கள் பொறுப்பு ஏற்கும் நிலை ஏற்படலாம். எனினும், பலவீனங்களை வலிமையாக மாற்றும் வாய்ப்பும் உள்ளது.

மீனம்:இன்று நீங்கள் தன்னம்பிக்கை குறைவாகவோ, குழப்பமாகவோ காணப்படலாம். இது நீங்கள் எடுக்கும் முடிவுகளில் எதிரொலிக்கும். அதுமட்டுமின்றி, எளிதான தீர்வுகளை காண்பதற்குக் கூட கடினமானதாக இருக்கும். எனவே, அன்றாட வேலைகளில் கவனம் செலுத்தவும். சர்ச்சைக்குரிய அல்லது பெரிய திட்டங்களை தவிர்க்கவும்.

இதையும் படிங்க: TODAY HOROSCOPE: அக்.11ஆம் தேதி ராசிபலன்

Last Updated : Oct 12, 2022, 6:43 AM IST

ABOUT THE AUTHOR

...view details