தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிறந்த விவசாயிக்கான கேடயம் பெற்ற அரசின் தலைமைக் கொறடா!

அரியலூர் : கரும்பில் அதிக மகசூல் பெற்ற விவசாயியான அரசின் தலைமைக் கொறடா ராஜேந்திரனுக்கு மாவட்ட ஆட்சியர் சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கினார்.

சிறந்த விவசாயிக்கான கேடயம் பெற்ற அரசு தலைமை கொறடா

By

Published : Sep 28, 2019, 10:39 AM IST


அரியலூரில் மாவட்டத்தில் கோத்தாரி சர்க்கரை ஆலை சார்பில் கரும்பு சாகுபடி குறித்த தொழில்நுட்ப கருத்தரங்கம் கரும்பு விவசாயிகளுக்கு நடைபெற்றது. இக்கருத்தரங்கில் விவசாயியும் அரசின் தலைமைக் கொறடாவுமான தாமரை ராஜேந்திரன், மாவட்ட ஆட்சியர், முதன்மை வேளாண்மை விஞ்ஞானிகள் பலரும் கலந்துகொண்டனர்.

சிறந்த விவசாயிக்கான கேடயம் பெற்ற அரசு தலைமை கொறடா

கருத்தரங்கில் கரும்பு சாகுபடியில் தற்போது உள்ள நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி எவ்வாறு அதிக மகசூல் பெறுவது, சொட்டு நீர் பாசனத்தை பயன்படுத்தி மகசூல் பெருக்குவது மற்றும் செலவுகளைக் குறைத்து அதிக வருவாயை எவ்வாறு ஈட்டுவது உள்ளிட்ட பல்வேறு விதமான தொழில்நுட்ப வசதிகள் குறித்தும் விவசாயிகளுக்கு கூறப்பட்டது.

மேலும் கரும்பு சாகுபடியில் அதிக மகசூல் பெற்ற விவசாயிகளுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில் மாவட்ட அளவில் ஏக்கர் ஒன்றிற்கு 106 டன் மகசூல் எடுத்த தாமரை ராஜேந்திரனுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி மாவட்ட ஆட்சியர் கௌரவித்தார். இந்நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகள் கலந்துகொண்டனர்.

இதையும் படியுங்க:

இயந்திர நாற்று நடவு முறையால் மகசூல் அதிகரிக்கும்' - வேளாண்மை துணை இயக்குநர்

ABOUT THE AUTHOR

...view details