தென்னிந்திய அளவிலான 59ஆவது சுரங்க பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் அரியலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதனையொட்டி நெய்வேலி பழுப்பு அனல்மின் நிலையம், ராம்கோ, டால்மியா, செட்டிநாடு சிமெண்ட் மற்றும் பல்வேறு சுரங்கத்தை பயன்படுத்தும் நிறுவனங்கள் சுரங்க பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் குறித்த கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சியை அலுவலர்கள், சுரங்கங்களில் பணிபுரியம் ஊழியர்கள் பலர் பார்வையிட்டனர். அப்போது விபத்தில்லாமல் சுரங்கத்தில் பணியாற்றுவது எப்படி, தற்போதுள்ள நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது குறித்து விளக்கப்பட்டது.
அரியலூரில் சுரங்கப் பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்!
அரியலூர்: தமிழ்நாட்டில் உள்ள 571 சுரங்கங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட்டு, சோதனைகள் நடத்தப்பட்டு வருவதாக தென்மண்டல சுரங்க பாதுகாப்பு உதவி இயக்குநர் விஜயகுமார் தெரிவித்தார்.
இதில், தென்மாநில சுரங்க பாதுகாப்பு உதவி இயக்குநர் விஜயகுமார், சென்னை மண்டல சுரங்க பாதுகாப்பு இயக்குநர் புஷன் பிரசாத்சிங், உதவி இயக்குநர் ரகுபதிபேடி ரெட்டி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று சுரங்கங்களில் பாதுகாப்பாக பணியாற்றுவது குறித்து விளக்கமளித்தனர். இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய தென்மாநில சுரங்க பாதுகாப்பு உதவி இயக்குநர் விஜயகுமார், சுரங்கங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு மத்திய சுரங்க பாதுகாப்பு அமைச்சகத்தின் சார்பில் பாதுகாப்பு குறித்த பயிற்சிகள் 12நாட்கள் அளிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் 571 சுரங்கங்கள் பதிவுசெய்து செயல்பட்டு வருகின்றன.
இச்சுரங்கங்களை கண்காணிக்க மத்திய சுரங்க பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் ஆய்வு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வுக் குழுவினர் சுரங்கங்களை ஆய்வுசெய்து வருகின்றனர். இதனால், விபத்துகள் பெருமளவில் குறைந்து வருகிறது என்று தெரிவித்தார்.